
ஏதோ தப்பா படுது!’ - ஸ்ரீதேவி மறைவுக்கு முன் அமிதாப் பச்சன் பதிந்த ட்வீட்
ஸ்ரீதேவி மறைவுக்கு சில நிமிடங்கள் முன் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் பகிர்ந்த ட்வீட் வைரலாகி வருகிறது.
நேற்று முன்தினம், துபாய் நேரப்படி 11.30 மணியளவில் நடிகை ஸ்ரீதேவியின் உயிர் பிரிந்ததாக அவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
ஸ்ரீதேவி மறைவு செய்தி இந்திய நேரப்படி 3 மணியளவில்தான் ஊடகங்களில் வெளியானது. ஆனால் நேற்று முன்தினம் 1.15 மணியளவில் நடிகர் அமிதாப் பச்சன் தன் டிவிட்டர் பக்கத்தில் ‘ஏதோ தப்பா படுது.. வித்தியாசமான பதட்டம் நிலவுகிறது.. ஏன் என்று தெரியவில்லை’ என்று குறிப்பிட்டுள்ளார்.
Here's what he tweeted: “Na jaane kyun, ek ajeeb si ghabrahat ho rahi hai (Don’t know why, there’s a weird anxiety)”
அவர் ட்வீட் செய்த அடுத்த சில நிமிடங்களில் ஸ்ரீதேவி மறைவு செய்தி வெளியானது. இதனையடுத்து அமிதாப் பச்சனின் ட்விட்டர் பதிவை நெட்டிசன்கள் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.
’ஸ்ரீதேவியின் மறைவுப் பற்றி அமிதாப் பச்சனின் ஆறாம் உணர்வுக்கு முன்பே தெரிந்திருக்கிறது’ , ’இதை நம்பவே முடியவில்லை’ என்று நெட்டிசன்ஸ் ரீட்வீட் செய்து வருகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.