
விஜய் சேதுபதி
குள்ளநரி கூட்டம், ராமன் தேடிய சீதை, போன்ற படங்களில் நடித்திருந்தாலும் விஜய் சேதுபதியுடன் நடித்த பீட்சா படம் மூலம் புகழ்பெற்றவர் ரம்யா நம்பீசன்.மேலும் மீண்டும் விஜய் சேதுபதியுடன், சேதுபதி படத்தில் ஜோடி போட்டார்.இதில் வந்த கொஞ்சிப் பேசிட வேண்டாம் பாடலின் மூலம் பட்டி தொட்டியெங்கும் புகழ் பெற்றார்.
முன்னணி
ஆனாலும் இவரால் முன்னணி கதாபாத்திரத்துக்கு வர முடியவில்லை.இதனால் பெரிய ஹீரோ, சிறிய ஹீரோ என்று பாராமல் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தொலைக்காட்சி தொடர் மூலம் புகழ்பெற்று வெள்ளித்திரைக்குள் காலடி எடுத்து வைத்தவர் கவின்(வேட்டையன்). இவருக்கு ஜோடியாக நட்புன்னா என்னான்னு தெரியுமா என்ற படத்தில் நடித்துள்ளார்.
முக்கியத்துவம்
இதுபற்றி ரம்யா நம்பீசன் கூறுகையில், தமிழில் விஜய் சேதுபதியுடன் பீட்ஸா, சேதுபதி போன்ற படங்களில் நடித்துள்ளேன்.இரண்டு படங்களுமே எனக்கு ஹிட்தான். தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்கள் கிடைக்கவில்லை.நானும் அதற்காக முயற்சி எடுக்கவில்லை. காரணம் நான் எப்போதும் கதைக்கும் கதாபாத்திரத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறேன்.
திருப்தி
அந்த வகையில் எனக்கு திருப்திகரமான வேடங்கள் கிடைத்தால் ஹீரோ புதுமுகம் என்றாலும் நான் கவலைப்படுதில்லை. அப்படித்தான் சீரியல் நடிகர் கவினுக்கு ஜோடியாக நடித்துள்ளேன்.இதே போல் மலையாளத்திலும் அறிமுக நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளேன்.
ஆனால் அந்த படத்தில் கதையில் எனக்கு முக்கியத்துவம் இருக்கும். அதேபோல தமிழில் நான் நடித்துள்ள நட்புன்னா என்னானு தெரியுமா படத்திலும் எனது கேரக்டருக்கு முக்கியத்துவம் உள்ளது என்கிறார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.