
பாலிவுட் திரையுலகின் Big B என அமிதாப் பச்சனுக்கு கடந்த 11ம் தேதி கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில் மகன் அபிஷேக் பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய், பேத்தி ஆராத்யா ஆகியோருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அனைவரும் மும்பையில் உள்ள நானாவதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். முதலில் ஐஸ்வர்யா ராய், ஆராத்யா வீடு திரும்பினர். அதன் பின்னர் ஆகஸ்ட் 2ம் தேதி அமிதாப் பச்சன் குணமடைந்து வீடு திரும்பினார்.
தற்போது 77 வயதாகும் அமிதாப் பச்சன் கொரோனா தொற்று ஏற்பட்டது முதல் மருத்துவமனையில் தான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்பது வரை சோசியல் மீடியாவில் ஆக்டிவாக பதிவிட்டு வந்தார். மேலும் தொற்றிலிருந்து மீண்ட பிறகும் ரசிகர்களுக்கு நன்றி கூறி பதிவிட்டு வருகிறார். சில சமயங்களில் இந்தியிலும், பல நேரங்களில் ஆங்கிலத்திலும் பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில் அமிதாப் பச்சன் ஆங்கிலத்தில் பதிவிட்டதை பார்த்த ஆங்கிலத்தில் போட்ட ட்வீட்டை பார்த்த சமூக வலைதளவாசி ஒருவர், அமிதாப் பச்சன் ஜி நீங்கள் இந்தியில் போஸ்ட் செய்தால் நன்றாக இருக்கும் என்று தெரிவித்தார். அவரின் கமெண்ட்டை பார்த்த அமிதாப் கூறியிருப்பதாவது, நீங்களும் போஸ்ட் என்கிற ஆங்கில வார்த்தையை பயன்படுத்தியிருக்கிறீர்கள். அதை இந்தியில் எழுதியிருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
அமிதாப் பச்சனின் இந்த நெத்தியடி பதிவு சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதை பார்க்கும் அவருடைய ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். மேலும் அமிதாப் பச்சனிடம் பேசி ஜெயிக்க முடியுமா? என்றும், தேவையில்லாமல் அவரை சீண்டி பார்க்க வேண்டாம் என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.