‘அருவா சண்ட’ டீஸர் வெளியிட்ட இயக்குநர் அமீர் ..!

 
Published : Jan 09, 2018, 12:08 PM ISTUpdated : Sep 19, 2018, 01:48 AM IST
‘அருவா சண்ட’ டீஸர் வெளியிட்ட இயக்குநர் அமீர் ..!

சுருக்கம்

ameer release the aruva sandai teaser

சிலந்தி, ரணதந்த்ரா, ஆகிய  படங்களைத் தொடர்ந்து ஆதிராஜன் எழுதி இயக்கும் திரைப்படம் ‘அருவா சண்ட’ இந்த படத்தின்  இறுதிக்கட்ட பணிகள் தற்போது வேகமாக நடந்து வருகிறது. 

புதுமுக நடிகர்  ராஜா நாயகனாக அறிமுகமாகும் இந்தப் படத்தில்  மாளவிகா மேனன், சரண்யா  பொன்வண்ணன், ‘ஆடுகளம்’ நரேன், கஞ்சா கருப்பு, சௌந்தர்ராஜா, மதுரை சுஜாதா, காதல் சுகுமார், விஜய் டிவி சரத் உட்பட பலர் நடித்திருக்கின்றனர். 

இந்தப்படம் காதல்  சண்டையையும், கபடிச் சண்டையையும் கதைக்களமாக கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது. தரண் இசையில் கவிப்பேரரசு வைரமுத்து பாடல்களை எழுதியிருக்கிறார். 

கௌரவக் கொலைகளின் பின்னணியில் உருவாகும் இந்தப் படத்திற்கு சந்தோஷ் பாண்டி  ஒளிப்பதிவு செய்ய, சுரேஷ் கல்லேரி கலை அமைக்க, வி.ஜே. சாபு ஜோசப் படத்தொகுப்பை கையாண்டிருக்கிறார். பரபரப்பான திரைக்கதையோடு உருவாகும் ‘அருவா சண்ட’ படத்தின் டீஸரை, இயக்குநர் அமீர் வெளியிட்டார். ’டீஸர் நன்றாக இருக்கிறது,  படம் வெற்றிபெற வாழ்த்துக்கள்”  என்று அமீர் பாராட்டினார்.    ஒயிட் ஸ்கிரீன் நிறுவனம் சார்பில் இந்தப் படத்தை வி.ராஜா தயாரித்திருக்கிறார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அப்பாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க ஆசை இவ்வளவு மக்கள் Support பண்றாங்க.. சண்முக பாண்டியன்
ஒருத்தர விடல; வீடு புகுந்து எல்லோரையும் தூக்கிய போலீஸ்: பாக்கியத்தின் ரிவெஞ்ச் ஸ்டார்ட்! பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அதிரடி புரோமோ!