
பிரதமர் மோடியின் கருப்புப்பண நடவடிக்கைக்கு முதல் ஆளாக ஆதரவு குரல் கொடுத்தவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
ஆகையால் முதலில் அவரால் 'கபாலி' படத்தின் உண்மையான கணக்கை காட்ட முடியுமா? என்று பிரபல இயக்குனர் அமீர் கேள்வி எழுப்பியுள்ளார்.
சமீபத்தில் விழா ஒன்றில் பேசிய இயக்குனர் அமீர், 'விளம்பரங்கள் மூலம் பிரதமர் ஆனவர் மோடி. தேர்தலுக்கு முன் ரஜினிகாந்த், பவன்கல்யாண் போன்ற பெரிய நடிகர்களின் ஆதரவை பெற்று தான் மோடி பிரதமர் ஆனார் என்றும்.
தன்னுடைய ஆட்சியின் தோல்விகளை மறைக்கவே இந்த கருப்புப்பண விவகாரத்தை தற்போது கையில் எடுத்துள்ளார் மோடி என்றும்.
பிரதமரின் இந்த கருப்புப்பண அறிவிப்புக்கு ஆதரவு தெரிவித்த ரஜினிகாந்த், அவர் நடித்த 'கபாலி' படத்தின் கணக்கை காட்ட முடியுமா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் ரூ.150 டிக்கெட்டை ரூ.2000 வரை விற்பனை செய்தது நியாயமா? நாட்டில் எத்தனையோ கொடுமை நடந்தபோதெல்லாம் அதற்கு எதிராக குரல் கொடுக்காமல் கருப்பு பண நடவடிக்கைக்கு மட்டும் ரஜினிகாந்த் வாய்திறப்பதன் ரகசியம் என்ன' என்று அமீர் மோடியையும், சூப்பர் ஸ்டாரையும் நோக்கி சர்ச்சைக்குரிய கேள்விகளை எழுப்பியுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.