“பாலியல் சீண்டலுக்கு பெண்ணின் உடை தான் காரணமா?”... வைரலாகும் மாஸ்டர் டெலிடேட் சீன் வீடியோ...!

By Kanimozhi PannerselvamFirst Published Feb 7, 2021, 12:08 PM IST
Highlights

பெண்கள் மீதான பாலியல் குற்றங்கள் குறித்தும், அதற்கு அவர்கள் உடுத்தும் உடையே காரணம் என்பது போலவும் பேராசிரியை ஒருவரே பேசுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளது. 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு , ஸ்ரீமன், சஞ்சீவ் கௌரி கிஷன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்த மாஸ்டர் திரைப்படம் பொங்கல் விருந்தாக ஜனவரி 13ம் தேதி உலகமெங்கும் வெளியானது.  முதலில் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி அளித்த தமிழக அரசு, அதன் பின்னர் 50 சதவீத இருக்கைக்கு மட்டுமே அனுமதி என அறிவிப்பை வெளியிட்டு தியேட்டர் உரிமையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது.
50 சதவீத ஆக்குபன்ஸியிலும் மாஸ்டர் திரைப்படம் மாஸ் காட்டியது முதல் மூன்று நாட்களிலேயே வெட்ட வெளிச்சமானது. 

தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் என அனைத்து மொழி ரசிகர்களையும் கவர்ந்த மாஸ்டர் திரைப்படம் வசூல் ரீதியாகவும் அடுத்தடுத்து சாதனை படைத்தது. உலக அளவில் இதுவரை 200 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்துள்ளது. கொரோனா அச்சத்தை மீறி தியேட்டர்களுக்கு ரசிகர்களை வரவழைத்த மாஸ்டர் திரைப்படத்தால் நடிகர் விஜய்க்கு விநியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் என பலரும் நன்றி தெரிவித்தனர். 

மாஸ்டர் திரைப்படம் வெளியாகி 50 நாட்களுக்குப் பிறகே ஓடிடியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடந்த ஜனவரி 28ம் தேதி நள்ளிரவு முதலே அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. ஓடிடியிலும் கோடிக்கணக்கான பார்வையாளர்கள் மாஸ்டர் திரைப்படத்தை கண்டு ரசித்து வருகின்றனர். இந்நிலையில் மாஸ்டர் படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சிகளை அமேசான் ப்ரைம் நிறுவனம் வெளியிட்டு வருகிறது. 

HERE'S THE EXCLUSIVE DELETED SCENE FROM THE MOVIE! pic.twitter.com/oZ5zAkEYME

— amazon prime video IN (@PrimeVideoIN)

பெண்கள் மீதான பாலியல் குற்றங்கள் குறித்தும், அதற்கு அவர்கள் உடுத்தும் உடையே காரணம் என்பது போலவும் பேராசிரியை ஒருவரே பேசுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளது. அதற்கு விஜய் எத்தனை நாளைக்கு தான் பெண்களின் உடையையே குறை சொல்லுவீங்க என ஆவேசமாக பேசும் வசனம் இணையத்தில் வைரலாகி வருகிறது. படத்தின் நீளம் கருதி வெட்டப்பட்ட இந்த காட்சி தற்போதைய சூழ்நிலைக்கு மிகவும் தேவை என்பதால் ஏன் அதை படத்தில் பயன்படுத்தாமல் போனீர்கள் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 

click me!