விஜய் மேல் இன்னும்  காதல் உள்ளது - அதிர்ச்சி கொடுக்கும் அமலாபால்......!!! 

 
Published : Nov 21, 2016, 09:08 PM ISTUpdated : Sep 19, 2018, 01:57 AM IST
விஜய் மேல் இன்னும்  காதல் உள்ளது - அதிர்ச்சி கொடுக்கும் அமலாபால்......!!! 

சுருக்கம்

இந்த வருடம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாகிய  செய்திகளில் ஒரு இயக்குனர்  விஜய்-அமலாபால் விவாகரத்து விஷயம். 

'தெய்வத்திருமகள்' படத்தின்போது தோன்றிய  காதல் திருமணத்தில் முடிந்தது. ஆனால் என்ன காரணம் என்று தெரியவில்லை ஒரு வருடத்திலேயே இவர்களுடைய காதல் திருமணம் முடிவிற்கு வந்துவிட்டது.

 இவர்கள்  பிரிவுக்கு பல காரணங்கள் கூறப்பட்ட நிலையில் தங்களுடைய பிரிவு குறித்து அமலாபால் முதல்முறையாக மனம் திறந்து பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
 
18 வயதில் 'மைனா' படத்தில் நடித்து 23 வயதில் திருமணம் செய்து கொண்டதாகவும், உண்மையில் இந்த வயது திருமணத்திற்கு ஏற்ற வயதில்லை என்றும் அந்த சமயத்தில் தனக்கு இதுகுறித்து அறிவுரை யாரும் கூறவில்லை என்றும் கூறியுள்ளார். 

யாரும் பிரிவதற்காக காதலிப்பதில்லை. ஆனால் நாங்கள் பிரிய எடுத்த முடிவு கடினமானது. இருப்பினும் விஜய்யை நான் இன்னும் காதலிக்கின்றேன். எப்போதும் அந்த முதல் காதல் என்  மனதில் இருக்கும்' என்று கூறி அனைவர்க்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
 
விவாகரத்து முடிவு எடுத்த பின்னர் தற்போது தனுஷுடன் வடசென்னை', 'விஐபி 2' மற்றும் 'திருட்டுப்பயலே 2' ஆகிய படங்களில் அமலாபால் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

போடுறா வெடிய... ஜெயிலர் 2-வில் பாலிவுட் பாட்ஷா நடிப்பது உறுதி - அடிதூள் அப்டேட் சொன்ன பிரபலம்
அரசனாக மோகன்லால் நடித்த விருஷபா... அடிபொலியாக இருந்ததா? விமர்சனம் இதோ