மேனேஜருடன் ரகசிய தொடர்பா? மீண்டும் சர்ச்சையில் சிக்கிய அமலாபால்!

Published : Dec 17, 2018, 11:46 AM ISTUpdated : Dec 17, 2018, 11:53 AM IST
மேனேஜருடன் ரகசிய தொடர்பா? மீண்டும் சர்ச்சையில் சிக்கிய அமலாபால்!

சுருக்கம்

நடிகை அமலாபால் இயக்குனர் ஏ.எல்.விஜய்யிடம் இருந்து விவாகரத்து பெற்ற பின், தமிழ் திரையுலகில் தொடர்ந்து கதாநாயகியாக மட்டுமே நடித்து வருவதால் என்னவோ... அவரைப் பற்றி அடிக்கடி கிசுகிசுக்கள் வருவது வாடிக்கையாகி விட்டது.

நடிகை அமலாபால் இயக்குனர் ஏ.எல்.விஜய்யிடம் இருந்து விவாகரத்து பெற்ற பின், தமிழ் திரையுலகில் தொடர்ந்து கதாநாயகியாக மட்டுமே நடித்து வருவதால் என்னவோ... அவரைப் பற்றி அடிக்கடி கிசுகிசுக்கள் வருவது வாடிக்கையாகி விட்டது.

ஏற்கனவே கடந்த மாதம், நடிகர் விஷ்ணு விஷாலுடன், 'ராட்சசன்' படத்தில் நடித்தபோது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்ததாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த செய்தி வெளியாவதற்கு ஓரிரு தினங்களுக்கு முன்பு தான் விஷ்ணு தன்னுடைய மனைவி ரஜினியிடம் இருந்து விவாகரத்து பெற்றதாக அறிவித்தார். உடனடியாக இப்படி ஒரு செய்தி வெளியானதால் அது அவருக்கு மேலும் அதிர்ச்சியூட்டும் விதமாக இருந்தது.

இந்த செய்தி குறித்து விஷ்ணு விஷால் தன்னுடைய கண்டனத்தை தெரிவித்ததோடு, இது முற்றிலும் பொய்யான தகவல் என கூறி தீயாக பரவி வந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இதைத்தொடர்ந்து தற்போது நடிகை அமலா பால் மீண்டும் மற்றொரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். அமலாபாலுக்கும் அவருடைய மேனேஜர் பிரதீப் குமார் என்பவருக்கும் ரசகசிய தொடர்பு உள்ளதாக சில செய்திகள் வெளியானது.

தற்போது அமலாபால் அவருடைய ட்விட்டர் பக்கத்தில் இந்த செய்தி குறித்து தெளிவுபடுத்தியுள்ளார்.  இது குறித்து அவர் கூறியுள்ளது "என்னை பற்றியும் எனது மேலாளர் பற்றியும் தவறான ஒரு செய்தி பரவி வருகிறது. அவர் எனது மேலாளர் மட்டும்தான். அவர் எனது தேதிகளை பார்த்துக்கொள்பவர் மட்டுமே என்று கூறி உள்ளார்". 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அய்யய்யோ மீனா கண்டுபிடிச்சிட்டாளே... சீட்டிங் பண்ணி சிக்கிய ரோகிணி - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
அஞ்சானை அரெஸ்ட் பண்ண உத்தரவா? கைது நடவடிக்கை பற்றி உண்மையை போட்டுடைத்த லிங்குசாமி