
மைனா, சிந்து சமவெளி ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை அமலாபால், பின் விஜய், ஆர்யா, தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் அளவிற்கு உயர்ந்தார்.
இவர் நல்ல மார்க்கெட் இருக்கும் போதே பிரபல இயக்குனர் ஏ.எல்.விஜயை காதலித்து திருமணம் செய்துகொண்டார், சந்தோஷமாக சென்ற இவர்களது வாழ்க்கையில் என்ன நடந்தது என தெரியவில்லை.
திருமணம் ஆனா ஒரே வருடத்தில், சில கருத்துகள் தங்களுக்குள் ஒற்று போகவில்லை என கூறி விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.
ஆனால் தற்போது வரை இருவரும் ஒருவர் மீது ஒருவர் இன்னும் அன்பு வைத்துள்ளதாக அமலா பால் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இயக்குனர் விஜயும் அவரது நண்பர்களிடம் அமலாவை விட்டு தான் பிரிந்ததற்கு முக்கிய காரணம் என் அப்பா என்று சொல்லிக்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
மேலும் தன்னுடைய காதல் மனைவியா பிரித்ததற்காக அப்பா மகனுக்கும் ஒரு சில கருத்து வேறுபாடு ஏற்பட்டு விஜய் தனது குடும்பத்தாருடன் இல்லாமல் தனியே வாழ்ந்துவருவதாக சொல்லப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.