
அமலாபாலுக்கு விசிட்டிங் கார்டே தேவையில்லை! சிந்து சமவெளி! எனும் சில்பான்ஸான படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால் வைத்து, பின் மைனா படத்தில், பின் இயக்குநர் ஏ.எல். விஜய்யை கை பிடித்து...என்றெல்லாம் நீட்டி முழக்கவும் தேவையில்லை. காரணம் அந்தளவுக்கு ஸ்பாட் லைட் தன் மீது விழும்படியே பார்த்துக் கொண்டிருக்குது பொண்ணு.
இத்தனைக்கும் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ என்று அர்விந்த்சாமியுடன் நடித்து முடித்து ரிலீஸுக்கு காத்திருக்கும் அந்த ஒரு படத்தை தாண்டி அமலாவின் கையில் உருப்படியாக எந்த கமிட்மெண்டும் இல்லை. ஆனாலும் மேடம்தான் கோலிவுட் மற்றும் மல்லூட்டின் சென்சேஷனல் டிரெண்டிங்கில் செமத்தியாய் கொடிகட்டி பறக்கிறார்.
தானாக சென்று பரபரப்பை கிளறுவது மட்டுமில்லாமல், தன்னை தேடி வரும் பரபரப்பையும் எலாஸ்டிக் போல இழுத்துவிட்டு எக்கச்சக்க ஃபேமஸை உருவாக்கிக் கொள்வதுதான் அமலாவின் கெத்தே.
கேரளாவில் வாங்கிய காரை, வரி குறைவுக்காக பாண்டிச்சேரியின் பொய்யான முகவரியை கொடுத்து பதிவு செய்தார் எனும் சிக்கலில் நியாயப்படி அமலாபால் வகையாக விமர்சனங்களை வாங்கித்தான் கட்டியிருக்க வேண்டும். ஆனால் அவரோ ‘என்னை ஏன் இப்படி துரத்தி துரத்தி வேட்டையாட துடிக்கிறார்கள் என்று புரியவில்லை! நான் படகில் பயணிப்பது கூட பாவமான காரியமாக சிலர் பார்வைக்கு படலாம்.’ என்று பிளேட்டை திருப்பினார். அந்த பிரச்னையில் அமலாபால் கைதானார்! என்று கிளம்பிய தகவல் கூட ‘பிரபல நடிகை கைது’ என்று புகழ் தேடி தந்தது.
விவாகரத்து ஆகிவிட்டோம் என்கிற ஃபீலிங்கெல்லாம் இல்லாமல் ஃபீல்டுகு வந்த புதுமுக நடிகை போல் அமல்ஸ் கொடுக்கும் அலப்பறைகள் ஆஸம் ரகங்கள்.
இப்போது கடந்த சில நாட்களாக வேறொரு சென்சேஷனல் செய்தி அவரை வட்டமிட்டு பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறது. டான்ஸ் பிராக்டீஸ் செய்ய சென்ற இடத்தில் அழகேசன் எனும் தொழில் அதிபர் தன்னை அநாகரிக எண்ணத்துடன், அபத்தமான வார்த்தைகளுடன் அணுகினார் என்று இவர் போலீஸில் புகார் கொடுக்க, அந்த அல்கேட்ஸோ இப்போது புழலில் உப்பில்லா புளியோதரை சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்.
இந்த பிரச்னை குறித்து மீண்டும் பேசியிருக்கும் அமலாபால் ‘என்னை மாமிச துண்டு போல் விற்பனை செய்ய அந்த நபர் முயன்றார்.’ என்று மலேஷியாவில் உள்ள தொழில் அதிபர் கொடுக்கும் விருந்தில் கலந்து கொள்ளும்படி தன்னை அவர் வர்புறுத்தினார் எனும் ரேஞ்சிலும் போட்டுத் தாளித்துள்ளார்.
கூடவே ஹாலிவுட்டில் நடிகைகளுக்கு தரப்படும் பாலியல் தொல்லைகளை அம்பலப்படுத்தல், எதிர்த்தல் எனும் நோக்கத்தில் உருவாக்கப்பட்ட ‘மீ டூ’ எனும் ஹேஸ்டேக்கில் ஏஞ்சலினா ஜோலி போன்றோர் பதிவு செய்துள்ள தளத்தில் அமல்ஸும் பதிவு செய்து தன்னை போகஸ் செய்திருக்கிறார்.
அமலாபாலின் இந்த அசராத அட்ராசிட்டிகளால் அவர் தொடர்ந்து லைம் லைட்டில்தான் பயணித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் இதையெல்லாம் தாண்டி அந்த பொண்ணுக்கு இன்னாபா வேணும்? என்கிறார்கள் கோலிவுட், மல்லூட்டின் சக நடிகைகள்.
அமல்ஸ்தான் இதுக்கு பதில் சொல்லணும்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.