
இந்த அடைமழைக்கு நடுவிலும் கோலிவுட் வி.ஐ.பி.க்கள் மத்தியில் ட்ரெண்டிங் டார்லிங் ஆகியிருக்கிறார் அமலா பால். எப்டியாம்?
தனது காஸ்ட்லி காருக்கு வரியை குறைத்து கட்டுவதற்காக புதுச்சேரியில் போலி முகவரி கொடுத்து அதை பதிவு செய்தார் என்று அமலா பால் மேல் ஒரு புகார் எழுந்தது. புதுவையின் துணைநிலை ஆளுநரான கிரண்பேடி கூட இந்த விவகாரத்தில் ‘விசாரிக்க உத்தரவிடுகிறேன்’ என்று ஹாட் ஆர்டர் போட்டார்.
துவக்கத்தில் அமைதியாக இருந்த அமல்ஸ் அதன் பிறகு ஒரு சின்ன ஸ்டேட்மெண்ட் மூலம் தன்னை நியாயப்படுத்தினார். இதற்கு பரவலாக பாசிடீவ் ரெஸ்பான்ஸ் வந்த நிலையில் நேற்று வரிந்து வரிந்து பாடம் நடத்தியிருக்கிறார்.
அதில் தேசப்பற்று, தனிமனித உரிமை, பொருளாதாரம், அரசியல் வரலாறு, நக்கல் - நய்யாண்டி, கோப தாபங்கள் என அம்புட்டையும் கொட்டி கலவை சோறு கிண்டியிருக்கிறார்.
அதில் ஹைலைட்டான வரிகள்...
* என் மீதும், என் குடும்பத்தின் மீதும் குறிவைத்துப் பரப்பப்படும் தேவையற்ற வதந்திகளால் ஏற்படும் துன்புறுதல்களுக்கு எதிராக நான் பேச வேண்டி இருக்கிறது.
* ஒரு இந்திய பிரஜையான நான் இந்தியா முழுவதும் எங்கு வேண்டுமானாலும் சென்று வேலை பார்க்கவும், சொத்துக்கள் வாங்கவும் உரிமை இருக்கிறது.
* நான் தெலுங்கு சினிமாவில் நடிப்பதற்கும் , பெங்களூருவில் சொத்து வாங்குவதற்கும் என்னைப் பற்றி விமர்சனம் செய்யும் ஞானிகளிடம் அனுமதி வாங்க வேண்டுமோ?
* இந்த ஞானிகளுக்கெல்லாம் 70 ஆண்டுகளில் நமது நாடு கடந்து வந்த பாதை மறந்துவிட்டது...
என்றெல்லாம் நீட்டி முழக்கி ஒற்றுமை, வேற்றுமை, பாகுபாடு களைதல் என பெரியா பெரிய வார்த்தைகளை பயன்படுத்தியிருக்கிறார் அமல்ஸ்.
இதையெல்லாம் வாசித்து வெகுண்டிருகும் கோலிவுட் வி.ஐ.பி.க்கள் ‘என்னாசுபா இந்த பொண்ணுக்கு! கருத்துச் செறிவுல போட்டுப் பொளக்குதே. மெய்யாலுமே இந்த பொண்ணுதான் தனக்காக எழுதிக்கிறாங்களா, இல்ல வேறு யாராச்சும் வசனம் எழுதிக் கொடுக்க வாயசைக்கிறாங்களா?’ என்று தங்களது வாட்ஸ் ஆப் குரூப்புகளுக்குள் மானாவாரியாக ஆலோசித்திருக்கிறார்கள்.
அதில் சில அக்குறும்பு பேர்வழிகளோ, ‘தலைவா, மைனா பொண்ணு ஃபைனா தமிழ் பேசுவாப்ல தான். ஆனா இவ்வளவு நுணுக்கமா அரசியலும், பொருளாதாரமும் பேசுறாங்கன்றதுதான் ஆச்சரியமா இருக்குது. நீங்கள்ளாம் சொல்றா மாதிரி யாரோ ஒரு விஷய விஞ்ஞானம் தெரிஞ்ச ’வேலையில்லா பட்டதாரிதான்’ இதையெல்லாம் எழுதிக் கொடுக்கிறாரான்னு டவுட்டா இருக்குது! ஜூனியர் டைரக்டருங்க பல பேரும் இதே ரூட்லதான் டவுட்டடிக்கிறாங்க.
அதெல்லாம் இல்ல, உண்மையாவே அமலாபால்தான் இதையெல்லாம் உக்காந்து செதுக்கியிருக்கிறாங்கன்னா நிச்சயமா அவங்க கிரேட்டுதான்.
பாலிடிக்ஸ் தெறிக்கிற பஞ்ச் டயலாக்கை ரஜினியும், கமலும், விஜய்யும் இனி இந்த பொண்ணுட்டயே கேட்டுக்கலாம்.” என்று பதிவிட்டுள்ளனர்.
இதற்கு வந்த பதில் ரியாக்ஷன்களை கேள்விப்பட்டால் அமலாபால் தனி ஆக்ஷன் பிளாக்கே நடத்துவார்! அதனால கப் சிப்புன்னு, மியூட் மோடுல போட்டுட்டு ஓடிடலாம்...என்று கண்ணடிக்கிறது கோலிவுட் பட்சி.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.