சகோதரனின் இரண்டாவது திருமணத்தில் கலந்து கொள்ளாத முன்னணி நடிகர்! இது தான் காரணமா?

Published : Jun 26, 2019, 04:59 PM ISTUpdated : Jun 26, 2019, 05:00 PM IST
சகோதரனின் இரண்டாவது திருமணத்தில் கலந்து கொள்ளாத முன்னணி நடிகர்! இது தான் காரணமா?

சுருக்கம்

தெலுங்கு முன்னணி நடிகர்களில் ஒருவர் அல்லு அர்ஜுன். இவர் பிரபல தயாரிப்பாளர் அல்லு அரவிந்தின் மகன் என்பது பலருக்கும் தெரிந்த விஷயம் தான்.  இவருக்கு அல்லு சிரிஷ் மற்றும் அல்லு பாபி என்கிற இரண்டு சகோதரர்கள் உள்ளனர். 

தெலுங்கு முன்னணி நடிகர்களில் ஒருவர் அல்லு அர்ஜுன். இவர் பிரபல தயாரிப்பாளர் அல்லு அரவிந்தின் மகன் என்பது பலருக்கும் தெரிந்த விஷயம் தான்.  இவருக்கு அல்லு சிரிஷ் மற்றும் அல்லு பாபி என்கிற இரண்டு சகோதரர்கள் உள்ளனர். 

அல்லு சிருஷ்டி,  ஓரிரு படங்களில் நடித்திருப்பதால், அவரை தெலுங்கு திரையுலகை சேர்ந்த பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்புள்ளது. ஆனால் அல்லு பாபி திரைப்பட தயாரிப்பு வேலைகளை தந்தையுடன் சேர்ந்து கவனித்து வருகிறார். இதனால் இவரை பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

இந்நிலையில் கடந்த 2005ஆம் ஆண்டு, அல்லு பாபிக்கு திருமணம் நடந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக இவர் தன்னுடைய மனைவியிடம் இருந்து 2016ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தார். இவர்களுக்கு 10 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் நீலாஷா  என்கிற யோகா பயிற்சியாளரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார் அல்லு பாபி. நேற்றுமுன்தினம் இவர்களுடைய திருமணம் மிகவும் எளிமையான முறையில் நடந்த நிலையில், இவருடைய திருமணத்தில் குறிப்பிட்ட நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொண்டனர். ஆனால் தற்போது படப்பிடிப்பில் அல்லு அர்ஜுன் பிசியாக இருப்பதால் தன்னுடைய சகோதரர் திருமணத்தில் கலந்துகொள்ளவில்லை என கூறப்படுகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

6 மாஸ் படங்களின் சாதனையை தவிடு பொடியாக்கிய 'துரந்தர்'! பாக்ஸ் ஆபீஸில் புதிய வரலாறு!
அருண் விஜய்யின் 'ரெட்ட தல' 25-ல் ரிலீஸ்; டிரெய்லருக்கு அமோக வரவேற்பு