
ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று வெளியாகியுள்ள புஷ்பா திரைப்படம் குறித்து, ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் ட்விட்டரில் வெளியிட்டு வரும் விமர்சனம் இந்த படம் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது. இதுகுறித்து சிறப்பு தொகுப்பு இதோ...
மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் முட்டம்செட்டி மீடியா இணைந்து தயாரித்து, சுகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள 'புஷ்பா : தி ரைஸ்' படத்தை தமிழகத்தில் ஸ்ரீ லட்சுமி மூவிஸ் வெளியிடுகிறது. ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் பாசில், சுனில், அனசுயா பரத்வாஜ் மற்றும் அஜய் கோஷ் ஆகியோரும் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரைலர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எக்கச்சக்கமாக எகிற செய்தது.
படத்தின் பெரும்பாலான காட்சிகள் மதுரையை சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளன. படத்திற்கான தமிழ் வசனங்களை மதன் கார்க்கி எழுதியுள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் படத்திற்கு இசையமைத்துள்ளார். பிரபல நடிகை சமந்தா ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள புஷ்பா தி ரைஸ், இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் முதல் பாகம், டிசம்பர் 17-ம் தேதி (இன்று) திரையரங்குகளில் பிரமாண்டமான முறையில் சுமார் 5 மொழிகளில் வெளியாகியுள்ளது.
இதை தொடர்ந்து, இந்த படத்தின் புரோமோஷன் பணிகளில் நேற்று முதல் கலந்து கொண்டனர் படக்குழுவினர். அந்த வகையில் நேற்று மும்பையில் இந்த படத்தின் புரொமோஷன் நடந்து முடிந்தது. இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள 'புஷ்பா' படத்திற்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த படத்தை பார்த்து விட்டு, ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவுகள் இதோ...
மொத்தத்தில் பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை அனைவருமே, புஷ்பா படத்தையில்... அல்லு அர்ஜுன் நடிப்பையும் தாறுமாறாக புகழ்ந்து வருகிறார்கள். எனவே இப்படம் பிளாக் பஸ்டர் ஹிட் என்பதில் சந்தேகம் இல்லை.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.