
தமிழ்சினிமாவில், திருமணத்துக்குப் பிறகு சக நடிகைகளுடன் கிசிகிசுக்கப்படாத ஒரு நடிகர் உண்டென்றால் அது தல அஜீத் மட்டுமே. அப்படிப்பட்டவர் அதிக பாலியல் சர்ர்சையில் அடிபடும் தமிழ் சினிமா குறித்து என்ன சொல்கிறார் என்று தெரிந்துகொள்ளும் ஆர்வம் இருக்கத்தானே செய்யும்?
’ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தில் சந்தானத்தின் ஜோடியாக நடித்தாரே நகைச்சுவை நடிகை மதுமிதா, அவர் அஜீத்துடன் ‘விஸ்வாசம்’ படத்தில் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்து வருகிறார். அஜீத்துடன் நடித்த அனுபவம் குறைத்து சிலாகித்துப் பேசும் மதுமிதா, மற்ற எல்லா சப்ஜெக்டுகளையும் விட தன்னிடம் சமையல் குறித்து அஜீத் ஆர்வமாக பேசுவாரென்றும் ஒரே ஒரு முறை மிடு’ விவகாரம் குறித்துப் பேசிய அவர், ‘’மும்பையில இருக்கிற அளவுக்கு ‘மி டு’ அமைப்பு தமிழ்ல வீரியமா இல்லை. இங்கேயும் அந்த அளவுக்கு வீரியமா பரவினா பல நடிகைகள் நிம்மதியா தொழில் பண்ணுவாங்க. இண்டஸ்ட்ரியும் நல்லா இருக்கும்’ என்று ஆதங்கப்பட்டாராம்.
‘இதை அவர் என்கிட்ட படம் துவங்கின சமயத்துல சொன்னார். அவரோட விருப்பம் தமிழ்சினிமாவுல ஓரளவு நிறைவேறியிருக்குன்னுதான் எனக்குத்தோணுது’ என்கிறார் மதுமிதா.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.