தென் மாவட்டங்களில் வெறித்தனமா வசூல் வேட்டையாடும் தல!! வேற லெவலுக்கு போகும் விஸ்வாசம்!!

Published : Jan 28, 2019, 06:19 PM IST
தென் மாவட்டங்களில் வெறித்தனமா வசூல் வேட்டையாடும் தல!! வேற லெவலுக்கு போகும் விஸ்வாசம்!!

சுருக்கம்

பொங்கலுக்கு ரஜினியின் பேட்ட படத்துடன் மோதிய அஜித்தின் விஸ்வாசம் மெகா ஹிட் அடித்துள்ளது. தற்போது தொடர் வசூல் வேட்டையில் தல அஜித்தின் "விஸ்வாசம்" படம் இருந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  

தமிழ் சினிமாவின் முன்னனணி நடிகர் தல அஜித். இவர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி இருந்த விஸ்வாசம் படத்தில் நடித்திருந்தார். பொங்கலுக்கு வெளியான இப்படம் தற்போது வரை வசூல் வேட்டையாடி வருகிறது. தமிழகம் முழுவதையும் சேர்த்து சுமார் ரூ 150- கோடிக்கும்  அதிகமான வசூல் சாதனை செய்து வருகிறதாம்.

அதிலும் கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய இடங்களில்சென்னையை விட அதிகமாக வசூல் செய்து வருவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. ஆம், இப்பகுதிகளில் மட்டும் விஸ்வாசம் ரூ 5 கோடிகளுக்கு அதிகமாக வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த வசூல் வேட்டை நிகழ்த்துவதும், தியேட்டர் நிறுவனங்கள் வெளியிடும் தகவல்களால் அஜித் ரசிகர்களை எல்லையில்லா மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கின்றனர்.

குடும்ப திரைக்கதையில் வெளியான விஸ்வாசம் அஜித்தின் முந்தைய சாதனைகளை உடைத்து புதிய வசூல் சாதனை படைத்தது.  ரஜினிகாந்தின் பேட்ட திரைப்படமும் ஹிட் அடித்த நிலையில், அப்படத்தின் வசூலை விஸ்வாசம் முந்தியதாக செய்திகள் வெளியாகின. அதேபோல, டிக்கெட் ரிஸர்வேஷனிலும் விஸ்வாசம்  முந்தைய சாதனைகளை உடைத்ததாக பல திரையரங்குகள் ட்வீட் போட்டது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கிழிந்த ஆடை அணிந்த டாக்ஸிக் நடிகை: விலை கேட்டால் அதிர்ந்து போவீர்கள்!
ஜெட் வேகத்தில் நடந்து முடிந்த ஷூட்டிங்: திரையரங்கு ரேஸில் இடம் பிடிக்கும் D54 படம்!