Valimai : நான் பார்த்த முதல் முகம் நீ... அம்மா சென்டிமெண்டில் உருகிய அஜித் - டிரெண்டாகும் ‘வலிமை’ பட பாடல்

Published : Dec 05, 2021, 07:04 PM IST
Valimai : நான் பார்த்த முதல் முகம் நீ... அம்மா சென்டிமெண்டில் உருகிய அஜித் - டிரெண்டாகும் ‘வலிமை’ பட பாடல்

சுருக்கம்

வலிமை படத்தின் இரண்டாவது பாடல் இன்று வெளியிடப்பட்டு உள்ளது. அம்மா சென்டிமெண்டை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இப்பாடலை சித் ஸ்ரீராம் பாடியுள்ளார். 

நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றிக்கு பின் அஜித்தும், எச்.வினோத்தும் இணைந்து பணியாற்றியுள்ள படம் வலிமை. போனிகபூர் தயாரித்துள்ள இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார். மேலும் வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடிக்க, யோகிபாபு, புகழ் ஆகியோர் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்துக்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். வலிமை படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. 

இப்படம் அடுத்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனால் படத்தின் அப்டேட்டுக்களும் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. ஏற்கனவே இப்படடத்தின் டீசர், முதல் பாடல் ஆகியவை வெளியாகி ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், வலிமை படத்தின் இரண்டாவது பாடல் இன்று வெளியிடப்பட்டு உள்ளது. அம்மா சென்டிமெண்டை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இப்பாடலை சித் ஸ்ரீராம் பாடியுள்ளார். விக்னேஷ் சிவன் இப்பாடல் வரிகளை எழுதி உள்ளார். ‘நான் பார்த்த முதல் முகம் நீ... நான் கேட்ட முதல் குரல் நீ’ என அஜித் பேசும் வசனத்துடன் தொடங்கும் இப்பாடல் யூடியூபில் டிரெண்டாகி வருகிறது.

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Sai Abhyankkar : அனிருத்தை விட டபுள் மடங்கு பிசியான சாய் அபயங்கர்! அவர் கைவசம் உள்ள ஒரு டஜன் படங்கள் என்னென்ன?
Bigg Boss 10 : பிக் பாஸ் வீட்டில் நடந்த மிட் வீக் எவிக்‌ஷன்... அதிரடியாக எலிமினேட் செய்யப்பட்ட போட்டியாளர் யார்?