
’நேர் கொண்ட பார்வை’க்கு அடுத்தபடியாக வினோத் இயக்கத்தில் அஜீத் இணையவுள்ள ‘தல 59’ படம் இதுவரை அஜீத் நடித்த படங்களிலேயே அதிக சண்டைக் காட்சிகள் கொண்ட படமாக உருவாகவிருப்பதாகவும் அதற்காக அஜீத் மூன்று மாதம் விஷேச உடற்பயிற்சிகள் மேற்கொள்ளவிருப்பதாகவும் நம்பமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
‘நே.கொ.பா’ படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றன. ஆகஸ்ட் 10ம் தேதி ரிலீஸாகவுள்ள இப்பட புரமோஷன் பணிகள் ஜூலை முதல் வாரத்தில் தொடங்கவுள்ளன. இந்நிலையில் இதே கூட்டணியின் அடுத்த படம் குறித்த மிக முக்கியமான செய்தி ஒன்று கசிந்துள்ளது. வினோத்தின் அடுத்த படம் முழு நீள ஆக்ஷன் படமாகும். அவர் அஜீத்துக்குக் கதை சொன்னபோது மிகவும் தயக்கத்துடன் ‘சார் படத்துல அட்லீஸ்ட் 5 ஃபைட் சீனாவது வைக்கணும் சார்’ என்று சொல்ல, ‘என்னோட ஃபிசிக்கல் ஃபிட்னஸைப் பத்திக் கவலைப் படாதீங்க. நாளையில இருந்தே ஜிம்முக்குப் போறேன்’ என்று அவருக்குத் தைரியம் சொன்ன அஜீத் சொன்ன வாக்கு மாறாமல் தினமும் ஜிம்முக்குப் போய்க்கொண்டிருக்கிறாராம்.
அங்கு படுபயங்கர ஒர்க் அவுட்டில் இறங்கியிருக்கும் அஜீத், ஆகஸ்ட் இறுதியில் படப்பிடிப்பு தொடங்குவதற்குள் சுமார் 20 கிலோ வரை வெயிட்டைக் குறைத்து சின்னப்பையனாக மாற முடிவெடுத்திருக்கிறாராம்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.