அஜித் நடிப்பில் அடுத்ததாக உருவாக உள்ள தல 61 (Thala 61) படத்தையும் எச்.வினோத் தான் இயக்க உள்ளார். போனி கபூர் தயாரிக்க உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.
சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று போன்ற படங்களை இயக்கிய எச்.வினோத் (H Vinoth), அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கியதன் மூலம் முன்னணி இயக்குனராக உயர்ந்தார். பிங்க் படத்தின் ரீமேக்காக உருவாகி இருந்த இப்படத்தை போனி கபூர் தயாரித்திருந்தார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.
undefined
நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியை தொடர்ந்து அதே கூட்டணியில் தற்போது வலிமை (Valimai) படம் உருவாகி உள்ளது. அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகி இருக்கும் வலிமை திரைப்படம், வருகிற பிப்ரவரி 24-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இப்படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.
இதையடுத்து அஜித் நடிப்பில் உருவாக உள்ள தல 61 படத்தையும் எச்.வினோத் தான் இயக்க உள்ளார். போனி கபூர் தயாரிக்க உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இப்படத்தில் நடிகர் அஜித் (Ajith) இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளதாக கூறப்பட்டு வருகிறது. அதில் ஒன்று வில்லன் வேடம் என்றும் தகவல் வெளியானது.
இந்நிலையில், தல 61 படத்துக்காக தயாராகி வரும் நடிகர் அஜித்தின் (Ajith) லேட்டஸ்ட் போட்டோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. தாடியை நீளமாக வளர்த்து கோர்ட் சூட் மற்றும் கண்ணாடி போட்டு செம்ம ஸ்டைலிஷாக இருக்கும் அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், ஒருவேள இதுதான் அஜித்தின் வில்லன் லுக்கா இருக்குமோ என சந்தேகித்து வருகின்றனர்.