Valimai Release date : பான் இந்தியா படமாக கெத்து காட்ட தயாரான ‘வலிமை’.... அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு

Ganesh A   | Asianet News
Published : Feb 02, 2022, 10:54 AM IST
Valimai Release date : பான் இந்தியா படமாக கெத்து காட்ட தயாரான ‘வலிமை’.... அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு

சுருக்கம்

கொரோனா பரவல் குறைந்து வருவதன் காரணமாக ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் வலிமை படத்தின் ரிலீஸ் பணிகள் மீண்டும் வேகமெடுத்துள்ளன. 


நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியை தொடர்ந்து எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் 2-வது படம் வலிமை. இப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்துள்ளார். குடும்ப செண்டிமெண்ட் நிறைந்த அதிரடி ஆக்‌ஷன் திரைப்படமாக வலிமை தயாராகி உள்ளது. இதில் அஜித் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் ஹீரோயினாக காலா பட நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார். 

மேலும் யோகிபாபு, குக் வித் கோமாளி புகழ் ஆகியோர் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தில் வில்லன் கேரக்டரில் பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடித்துள்ளார். யுவன் மற்றும் ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. அதன்படி வருகிற ஜனவரி 13-ந் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய 4 மொழிகளில் இப்படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தனர்.

ஆனால் கொரோனா பாதிப்பு அதிகரித்ததன் காரணமாக தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால். அந்த சமயத்தில் படத்தை வெளியிட முடியாமல் போனது. தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதன் காரணமாக ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக வலிமை படத்தின் ரிலீஸ் பணிகள் மீண்டும் வேகமெடுத்துள்ளன.

இந்நிலையில், வலிமை படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இப்படம் வருகிற பிப்ரவரி 24-ந் தேதி தமிழ், தெலுங்கும் இந்தி, கன்னடம் ஆகிய 4 மொழிகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. வலிமை படக்குழுவின் இந்த அறிவிப்பால் அஜித் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

என்னுடைய மகனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பா? கொந்தளித்த கோமதி: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்!
நடிகை தாக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் விய்யூர் சிறைக்கு மாற்றம்; நடிகர் திலீப் விடுதலை!