அஜித் - ஷாலினியை பார்த்தாவது திருந்துவார்களா பெற்றோர்? ஆடம்பரம் இல்லாத உண்மை!

By manimegalai aFirst Published Feb 26, 2019, 6:17 PM IST
Highlights

ஊருக்கே உபதேசம் சொல்லும் பலர் தங்களுடைய வாழ்க்கையில், குடும்பத்தில், அப்படி இருக்கிறார்களா? என்றால் சந்தேகம் தான். 
 

ஊருக்கே உபதேசம் சொல்லும் பலர் தங்களுடைய வாழ்க்கையில், குடும்பத்தில், அப்படி இருக்கிறார்களா? என்றால் சந்தேகம் தான். 

உதாரணத்திற்கு பெற்றோர் பலர் குழந்தைகளை டிவி பார்க்காதே என கூறுவார்கள். ஆனால் அவர்கள் எப்போதும், டிவி முன்பு அமர்ந்து திரைப்படங்கள் மற்றும் சீரியல் பார்ப்பதை வழக்கமாக வைத்திருப்பார்கள். 

இந்த மாதிரி சூழ்நிலையில் குழந்தைகள் கவனம் சிதறடிக்கப்பட்டு, டிவி பார்க்கும் பழக்கத்தை கொண்டு வளர்வார்கள். அதே போல் காலையில் எழுந்து படி என சொல்லும் பெற்றோர்... மீண்டும் படுத்து தூங்கி விடுவார்கள். அப்போது அந்த மாணவனுக்கும் தூக்கம் தானே வரும்..? 

இது தான் விஷயம்:

சரி இதெல்லாம் விடுங்க, விஷயத்துக்கு வருவோம்... "நவீன தொழில் நுட்பத்தால் வளர்ச்சி அடைந்து வரும், நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அதிலும் செல் போன் பயன்படுத்துவோர் எண்ணியோ! பல கோடியாக உயர்ந்துள்ளது. 

ஒரு வீட்டில் ஐந்து பேர் இருந்தால் கூட, சிறு குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரும் செல்போன் பயன்படுத்துகிறார்கள்.

குழந்தைக்கு சாப்பாடு ஊட்டுவதில் துவங்கி, அழும் குழந்தையை சாமானத்தை படுத்த என, நினைவு தெரியாத குழந்தை கைகளில் கூட தற்போதைய பெற்றோர் செல் போன் கொடுத்து பழக்கப்படுத்துகிறார்கள். இதன் எதிரொலி குழந்தை LKG  படிக்கட்டு ஏறும் போதே... ஆன்ராய்டு போன் கேட்டு அடம் பிடிக்கிறது. 

பெற்றோர் எந்த நேரமும் செல்போனை கையில் வைத்திருப்பதை, பார்த்து வளரும் குழந்தைகளும் தங்களை அறியாமல், செல்போன், மற்றும் சமூக வலைத்தளங்களால் ஈர்க்கப்பட்டு அடிமையாகிறார்கள். இதனால் படிப்பில் கவனம் குறைகிறது. 

ஓடி ஆடி விளையாடும் வயதில் செல் போனின் உள்ள கேம்ஸை விளையாடுகிறார்கள். 

பின்விளைவுகள்: 

ஓடி ஆடி விளையாடாமல் இருப்பதால், சிறுவயதிலேயே உடல் எடை அதிகரிப்பது, இரவு முழுவதும் செல் போன் பார்ப்பதால் கண் பார்வை குறைபாடு, கீழே குனிந்து கொண்டு சாட் மற்றும் கேம் விளையாடுவதால் கழுத்து வழி, தூக்கமின்மை, ஹார்மோன் குறைபாடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை அவர்கள் சந்திக்க கூடும்.

போன் எதற்கு?

போன் கண்டுபிடிக்கப்பட்டது எதற்கு என யோசியுங்கள்? "தொலை தூரத்தில் உள்ள ஒருவர் அவருடைய நிலை குறித்து பெற்றோருக்கோ அல்லது நண்பர்களுக்கோ அறிவிப்பதற்கு" . அதிலும் செல் போன் இன்னும் பல வசதிகளுடன் வந்தது, ஒரு தகவலை எழுத்து மூலமாகவே, செல்லும் இடம் எல்லாம் கொண்டு சென்று பேச தான் கண்டுபிடித்த நோக்கமும் இந்து தான்.

ஆனால் இன்று பல தொழில் நுட்பங்களுடன் இருக்கும் விலை அதிகமான போன் வைத்திருந்ததால், அடுத்தவர்கள் நம்மை மதிப்பார்கள் என்கிற கண்ணோட்டம் உள்ளது. இதனால் சிலர் கடன் உடன் வாங்கி கூட புதிய மொபைல் போன் வாங்குகிறார்கள். கடன் வாங்கி கஷ்டத்தையும் அனுபவிக்கிறார்கள்.

அஜித் - ஷாலினி:

நடிகர் அஜித் மற்றும் அவருடைய மனைவி ஷாலினியை தெரியாதவர்கள் இருக்கவே முடியாது. இவர்களுக்கு இருக்கும் வசதிக்கு உலகில் உள்ள மிக விலை உயர்ந்த தங்கத்தினால் செய்யப்பட்ட போனை கூட பயன்படுத்தலாம். ஆனால் எப்போதும் இவர்கள் தங்கள் பிள்ளைகள் முன்னிலையில் ஆடம்பரத்தையோ, அதிக விலை உயர்ந்த கைபேசியை உபயோகித்ததே இல்லையாம்.

காரணம் இந்த செல் போனால் அவர்கள் ஈர்க்கப்படக் கூடாது  என்பதற்காக, அஜித் வெளிநாட்டில் இருந்து கூட பிரத்யேக கேமரா செட் அமைத்த கம்ப்யூட்டரில் தான் வீடியோ காலில் பேசுவார். 

தற்போது வரை இவர்கள் இருவருமே உபயோகிப்பது 2000 ரூபாய்க்கும் குறைவான சாதாரண போன் தான். அதன் மூலமே தன்னுடைய கணவருக்கும் மற்றும் குடும்பத்தினருக்கு ஷாலினி பேசுகிறார். 

நடிகர் ரோபோ ஷங்கர் கூட அஜித் உபயோகிப்பது சாதாரண போன் என சமீபத்தில் ஒரு விழாவின் போது கூறியிருந்தார். 

ஒவ்வொரு குழந்தைகளுக்கும் அவர்களுடைய முதல் ஹீரோ மற்றும் ஹீரோயின் பெற்ற தாய் தந்தை தான். அவர்களை பார்த்து தான் தங்களுடைய பழக்க வழங்கங்களை, குணாதிசயங்களை பெற்று வளர்கிறார்கள். எனவே முதலில் குழந்தைகளுக்காக பெற்றோரும் தங்களை மாற்றி கொள்ள வேண்டும் என்பதற்கு அஜித் ஷாலினியை மிகப்பெரிய உதாரணமாக கூறலாம்.

 

 

click me!