
நயன்தாராவின் காதலனாக இருக்கிற காரணத்தால் வாழ்க்கையில் எதை வேண்டுமானாலும் அடைந்துவிடலாம் என்ற விக்னேஷ் சிவனின் அபார நம்பிக்கையை மெச்சுவதா அல்லது ‘எல்லாம் கடந்து போகும்’ என்று மனதைத் திடப்படுத்திக்கொள்வதா என்று யோசிக்க வைக்கிற அளவுக்கு ஒரு ட்விட் போட்டிருக்கிறார் அவர்.
Congrats to all the #Oscar2019 winners & nominees !]
தலைவியின் காதலன் என்பதற்காக எந்த அளவுக்குத்தான் பொறுமை காக்க முடியும்? அப்பதிவால் கொந்தளித்துப்போன ரசிகர்கள் கமெண்ட் பிரதேசத்தில் விக்னேஷ் சிவனைத் திகட்டத் திகட்ட திட்டித்தீர்த்திருக்கிறார்கள்.
...படம் எதுவும் எடுக்காம நாள்பூரா நயன்தாரா கூட சுத்திட்டு ஈவ்னிங் ஆனதும் போய் கதவுகிட்ட தேவுடு காத்துட்டு இரு
அவார்டு ....ட்டுவானுங்க...வாய்ப்பு இல்ல ராஜா வாய்ப்பு இல்ல... என்று தொடங்கி வசவுகள் குவிகின்றன.இந்திய ராணுவத்தில் சேர ஆசைப்பட்டு துப்பாக்கியுடன் போஸ்கொடுத்துப் போட்ட ஒரு ட்விட்டுக்காக சில தினங்களுக்கு முன்பு வாங்கிக் கட்டிக்கொண்ட காயம் ஆறுவதற்குள் அடுத்த ஆப்பைத் தேடி வரவழைத்திருக்கிறார் விக்னேஷ் சிவன்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.