
தல அஜித் ‘தூக்கு துரை’ எனும் கதாபாத்திரத்துக்காக நடிகர் தம்பி ராமையா கொடுக்கும் பில்டு-அப்புகளுடன் தொடங்கும் அந்த வீடியோவில், ஒரு கூலிங் க்ளாஸ் மட்டும் அந்தரத்தில் பறந்து வந்து ஒருவரின் கண்களில் போய் தஞ்சம் அடைகிறது. அந்த நபர்தான் கதாநாயகனாக நடிக்கும் அஜித்.
கறுப்புத் தாடி, ஸ்டைலான தோற்றம் எனக் கலர்ஃபுல்லான என்ட்ரியாக இப்படி ஒரு அஜித் மாஸாக, அந்த வீடியோவின் இறுதியிலோ வெள்ளை நிறத் தலை முடி மற்றும் தாடி சகிதம் இன்னொரு அஜித்தும் தாறுமாறாக என்ட்ரி கொடுக்கிறார். அவரை லாங் ஷாட்டில் பார்க்கும்போது வீரம் பட 'விநாயகம்' அஜித்தின் கதாபாத்திரத்தை அப்படியே காபி பேஸ்ட் பண்ணதுபோல இருக்கிறார். ஆனால், க்ளோஸ் அப்பில் பார்க்கிறபோது அவருக்கு தாடி மற்றும் மீசை சில இன்ச்கள் அதிகமாகவே காட்டப்பட்டுள்ளது.
ரஜினியின் 'பேட்ட', சிம்புவின் 'வந்தா ராஜாவாதான் வருவேன்' போன்ற படங்கள் பொங்கலுக்கு வருவதில் விடாப்பிடியாக இருப்பதால் விஸ்வாசம் தள்ளிப்போகலாம் எனக் கூறப்பட்டு வந்தது. ஆனால், இந்த வீடியோவிலும்கூட பொங்கல் ரிலீஸ் என்றே உறுதியாகக் குறிப்பிடப்பட்டிருப்பதால் விஸ்வாசமும் தமது ரிலீஸில் எவ்வித மாற்றமும் செய்துகொள்ளாமல் பொங்கல் ரிலீஸ் ரேஸில் இன்னும் நீடிக்கிறது.
கிராமத்துப் பின்னணியில் பெரும்பாலான காட்சிகள் இதன் போஸ்டரில் காட்டப்பட்டுள்ளதால் பர்ஃபெக்ட்டான பொங்கல் வெளியீட்டுப் படமாக இந்த விஸ்வாசம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சர்ப்ரைஸாக வெளியிடப்பட்டுள்ள இந்த மோஷன் போஸ்டர் தற்போது இணையத்தில் கவனம் பெற்றுவருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.