முத்துப்பேட்டையில் நடிகை கஸ்தூரி…. கஜா நிவாரணப் பொருட்களை நேரில் வழங்கினார்… குவியும் பாராட்டு !!

Published : Nov 26, 2018, 07:09 AM IST
முத்துப்பேட்டையில்  நடிகை கஸ்தூரி…. கஜா நிவாரணப் பொருட்களை நேரில் வழங்கினார்… குவியும் பாராட்டு !!

சுருக்கம்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதியில் பொது மக்களையும் , பெண்களையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய நடிகை கஸ்தூரி அவர்களுக்கு நிவாரணப்  பொருட்களையும் வழங்கினார்.

கஜா புயல் தாக்கியதில்  கடும் சேதம் ஏற்பட்டுள்ள தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு நடிகை  கஸ்தூரி  12 லட்சம் ரூபாய் மதிப்பிள்ள நிவாரணப் பொருட்களை கடந்த வாரம் அனுப்பி வைத்தார்.

இது தொடர்பான நிகழ்ச்சியில் பேசிய அவர், நிறைய பேர் கோடிக் கணக்கில் உதவி உள்ளனர். நான் கொஞ்ச நாளாக சம்பாதிக்காமல் இருந்தேன். என்னிடம் பணம் இல்லாவிட்டாலும் மனம் இருக்கிறது. பன்னிரெண்டு லட்சம் ரூபாய்க்கு நிவாரணம் அனுப்பி இருக்கிறோம். அங்கு உடனடித்தேவை தண்ணீர் தான். சாதாரண தண்ணீரை குடி நீராக ஆக்கக் கூடிய கருவிகளை அனுப்பி வைக்கிறோம்.

1000 போர்வைகள் மற்றும் கொசு மருந்து உள்ளிட்டவைகளை அனுப்புகிறோம். நானும் அங்கு செல்கிறேன். நம்முடைய சகோதரர்கள் அங்கு இருக்கிறார்கள் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நேற்று திருவாரூர் மாவட்டம் முத்துப் பேட்டைக்குச் சென்ற நடிகை கஸ்தூரி, அங்குள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொது மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

தொடர்ந்து தான் கொண்டு வந்திருந்த நிவாரணப் பொருட்களை அங்கிருந்த பொது மக்கள் மற்றும் பெண்களுக்க வழங்கினார். மேலும் புயலால் பாதிக்கப்பட்ட பல பகுதிகளுக்கும் சென்று  கஸ்தூரி பார்வையிட்டார்.

கஸ்தூரியின் இந்த செயலுக்கு டெல்டா மாவட்ட  பொது மக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Ajith Love Story: அஜித் லவ் ஸ்டோரி தெரியுமா?! ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே நடந்த உண்மை சம்பவங்கள்!
நான் எதாவது பண்ணிப்பேன் - காதல் கணவரால் கண்ணீர் விட்டு கதறிய விஜய் டிவி சீரியல் ஹீரோயின்!