அஜித் பட ஷூட்டிங்கை இனி தமிழகத்தில் நடத்தவே முடியாது... இப்படியொரு சிக்கலில் மாட்டிய தல..!

By Thiraviaraj RMFirst Published Jan 29, 2019, 6:06 PM IST
Highlights

அஜித் இனி தன் படத்தின் ஷூட்டிங்கை தமிழகத்தில் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இனி வரும் படங்களின் ஷூட்டிங்கையும் ஆந்திராவில் நடத்தவே திட்டமிட்டு வருகிறார். 
 

அஜித் இனி தன் படத்தின் ஷூட்டிங்கை தமிழகத்தில் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இனி வரும் படங்களின் ஷூட்டிங்கையும் ஆந்திராவில் நடத்தவே திட்டமிட்டு வருகிறார்.

 

அஜித்தின் 59 வது படமான பிங்க் ரீமேக் ஷுட்டிங் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் தொடங்கி விட்டது. தனது பட ஷுட்டிங்கையும் இங்குதான் வைக்கச் சொல்கிறார் அஜித். தமிழ்நாட்டில் அவுட்டோரில் படம் பிடிப்பது அஜித் போன்ற டாப் ஹீரோக்களுக்கு டஃப்பான விஷயம்தான். அதற்காக முழுக்க முழுக்க இன்டோரிலேயே எடுத்து முடிக்க வேண்டிய பிங்க் ரீமேக் படத்தையும் ஆந்திராவுக்கு கொண்டு செல்கிறார்கள். 

தமிழக சப்ஜெட்டாக இருந்தாலும், ஆந்திராவிலுள்ள ராமோஜிராவ் ஸ்டூடியோவில் செட் போட்டு எடுத்து முடிக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறார். 'வீரம்' படத்தில் கதைக்களம் ஒட்டன்சத்திரம். ஆனால், ஆந்திராவில் படமாக்கப்பட்டது. வேதாளம், விவேகம் விஸ்வாசம் வரை ஆந்திராவில் மட்டுமே ஷூட்டிங் நடைபெற்றது. கடைசியாக என்னை அறிந்தால் படத்தின் பல காட்சிகள் சென்னையிலேயே எடுக்கப்பட்டது. அஜித் மிகவும் நல்ல மனிதர்தான். 

தமிழ்நாட்டில் அதிக ரசிகர்கள் அவருக்குதான் இருக்கிறார்கள். ஆனால், அவர் தன் படத்தின் ஷூட்டிங்கையெல்லாம் வெளியூரில் வைக்கிறார். இதனால், வெளியூர் தொழிலாளர்கள்தான் பயனடைகிறார்கள். தமிழ் சினிமா தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழக்கிறார்கள். அவர் தமிழ்நாட்டில் தன் ஷூட்டிங்கை நடத்த வேண்டும்" என்று சக நடிகரான மன்சூர் அலிகானே விமர்சித்தார். அஜித் நடிப்பில், ஹெச்.வினோத் இயக்கும் அடுத்த பட ஷூட்டிங்கையும் ஆந்திராவில் உள்ள ரமோஜிராவ் பிலிம் சிட்டியிலேயே நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள்.

 

இதற்கெல்லாம் காரணம் தமிழகத்தில் ஷூட்டிங் வைத்தால் ரசிகர்களின் கூடிவிடுவார்கள் என்பதே... அஜித்திற்கு இருக்கும் வெறித்தனமான ரசிகர் கூட்டம் கூடினால் ஷூட்டிங்க் நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆகையால் இனி வரும் காலங்களில் அஜித் படத்தின் ஷூட்டிங்கை தமிழகத்தில் நடத்த முடியாத சூழல் உருவாகி இருக்கிறது. 
 

click me!