மரண மாஸுக்கு விழுந்த மரண அடி! பேட்ட-யை பொட்டிக்குள் சுருள வைத்த விஸ்வாசம்! கல்யாண பிஸியில் கவலையை மறக்க துடிக்கும் ரஜினி

Published : Feb 04, 2019, 03:45 PM ISTUpdated : Feb 04, 2019, 03:54 PM IST
மரண மாஸுக்கு விழுந்த மரண அடி! பேட்ட-யை  பொட்டிக்குள் சுருள வைத்த விஸ்வாசம்! கல்யாண பிஸியில் கவலையை மறக்க துடிக்கும் ரஜினி

சுருக்கம்

தைப்பொங்கலுக்கு தரமாக மோதிய ரஜினி மற்றும் அஜித் படங்களில் விஸ்வாசம்தான் வசூல் மற்றும் மாஸில் நம்பர் 1! என்று வெறியாய் கிளம்பிய செய்தியை பேட்ட தரப்பு நம்பவே இல்லை. வாய்க்கு வாய் ‘நாங்கதான் ஹிட்’ என்று சீன் பண்ணிக் கொண்டிருந்தவர்களை வெச்சு செய்துவிட்டது விஸ்வாசம்.   

 சினிமா உலகம் எக்கச்சக்கமாய் மாறிவிட்டது. நல்ல படமாக இருந்தாலும் பத்துப் பதினைந்து நாள் தியேட்டரில் நின்றுவிட்டால் போதும் செமத்தியான வசூல் ஆகிவிடும் என்பதே தயாரிப்பாளர்களின் கணக்கு. ஆனால் ஜனவரி 10-ல் வெளியான விஸ்வாசம் 25 நாட்களை தொட்டும் இன்னமும் வெறித்தனமாக ஓடிக் கொண்டிருக்கிறது. 

ஆனால் அஜித்தோடு சீன் பை சீன் போட்டிக்கு நின்ற பேட்டயும் ஓப்பனிங்கில் இருந்து மரணமாஸ் ஹிட்டுதான் என்றாலும் கூட  இருபது நாட்களுக்கு மேல் அந்தப் படத்தால் பெரிதாய் தாக்குப் பிடிக்க முடியவில்லை என்பதே உண்மை. 


வசூலில் மட்டுமில்லை, வரவேற்பு, ஓட்டம் எல்லாவற்றிலும் அஜித்துதான் அடிச்சு தூக்கி இருக்கிறார்! என்று தல-க்கு சப்போர்ட்டாக சில தயாரிப்பாளர்கள் பேசியபோது, ரஜினி ஆதரவு தயாரிப்பாளர்கள் அதை எதிர்த்தனர். 

இந்நிலையில் கோயமுத்தூர் மண்டலத்தில் இரு படங்களும் ஓடும் தியேட்டர்கள் மற்றும் ஷோக்களின் எண்ணிக்கையை ஆதாரப்பூர்வமாக புள்ளி விபரத்துடன் எடுத்துக் காட்டி அதை நிரூபித்திருக்கிறது தல கோஷ்டி. பேட்ட படம் ஓடும் தியேட்டர்களின் எண்ணிக்கையை விட கணிசமான மடங்கு அதிகமாக விஸ்வாசம் ஓடிக்கொண்டிருப்பதும், மால்களில் ஷோக்கள் ரீதியாகவும் விஸ்வாசம் அதிகமாக ஓடிக் கொண்டிருப்பதும் நிரூபணமாகியிருக்கிறது. 

உதாரணத்துக்கு பத்து தியேட்டர்களில் பேட்ட ஓடினால் விஸ்வாசம் ஏறக்குறைய முப்பத்தைந்து தியேட்டர்களில் ஓடுகிறது! என்று நிரூபித்து ‘பேட்டயை பொட்டிக்குள் சுருள வைத்தது விஸ்வாசம்’ என்று கொளுத்திப் போட்டிருக்கிறார்களாம் எக்ஸ்ட்ரா வாலா வெடியை. 

இது ரஜினியின் காதுகளுக்கும் போக, வழக்கம்போல் வேகமாய் சிரித்தபடின் மகள் செளந்தர்யாவின் திருமண வேலைகளில் தன்னை பிஸியாக்கிக் கொண்டுவிட்டாராம். 
பரபரப்பில் கவலை மறந்து போகும் இல்லையா?!

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

பெரிய ஐஸ்வர்யா ராய்னு நெனப்பு... பேபினு சொன்ன வாயை உடைச்சிருவேன் - பாரு உடன் சண்டைபோட்ட கம்ருதீன்
ஷாருக்கானுக்கு இப்படி ஒரு விசித்திரமான பழக்கம் இருக்கிறதா? இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே..!