
அஜித்:
தல அஜித் தற்போது இயக்குனர் சிவா இயக்கத்தில் 'விசுவாசம்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் முழுக்க முழுக்க சென்னை சுற்று வட்டாரப் பகுதியில் தான் எடுக்கப்பட உள்ளது. விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ள நிலையில் அஜித் தன்னுடைய குடும்பத்துடன் ஜாலியாக இருந்து வருகிறார்.
மகளுடன் விளையாட்டு:
இந்நிலையில் ஓரிரு தினங்களுக்கு முன் நடிகர் அஜித்தின் மகள் அனோஷ்கா படித்து வரும் பள்ளியில், ஸ்போர்ட்ஸ் டே வில் கலந்துக்கொண்டார் அஜித். அப்போது பெற்றோர்களுக்கும் ஒரு சில விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது.
இதில் தன்னுடைய மகளுடன் அஜித் விளையாடிய காட்சிகள் வைரலாகி வருகிறது.
டயர் ஓட்டிய அஜித்:
ரேஸ் பைக்கை அசால்ட்டாக ஓட்டும் மகள் அனோஷ்காவுடன் வெறும் சைக்கிள் டயரை ஓட்ட திணறி விட்டார். கடைசியில் ஓட்ட தெரியாமல் கையில் எடுத்துக்கொண்டு ஓடுவது போல இந்த வீடியோவில் உள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.