
தல, அஜித்தை பொறுத்தவரை, திரைப்படத்தில் ஒரு நிலையான இடத்தை பிடித்துவிட்டோம் என அதோடு நிறுத்தி விடாமல், இவருக்கு எந்தெந்த துறையில் ஆர்வம் இருக்கிறதோ அந்த திறமையை வளர்த்து கொள்வதிலும் நிறைய கவனம் செலுத்தினார்.
ஏற்கனவே கார் ரேஸ், பைக் ரேஸ், போட்டோ கிராபி, ஏரோ மாடலிங், ஆகியவற்றில் கில்லியாக திகழ்ந்தார் என்பது நாம் அறிந்தது தான். அதை தொடர்ந்து, கடந்த ஆண்டு முதல் துப்பாக்கி சுடுதலில், ஆர்வம் காட்ட துவங்கினார். இதனை உறுதி படுத்துவது போல்... அவ்வப்போது பல புகைப்படங்களும் சமூக வளையதளங்களில் வைரலாகியது.
இந்நிலையில் தான், தமிழ்நாடு துப்பாக்கி சுடுதல் சங்கம் சார்பாக கோவை காலவர் பயிற்சி மையத்தில் நடந்த துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் தல பங்கேற்று இன்ப அதிர்ச்சி கொடுத்தார். முதலில் பங்கேற்ற இந்த போட்டிலேயே அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றார். இவர் வெற்றி பெற்றதற்கான சான்றிதழும் வெளியாக, அதனை அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் தெறிக்கவிட்டனர்.
தற்போது அஜித், அடுத்த கட்ட போட்டிக்காக டெல்லிக்கு பறந்துள்ளார். இதனை உறுதிப்படுத்தும் விதமாக சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. மேலும் இவர் சில வீரர்களுடன் நிக்கும் காட்சிகளும் உள்ளது. ஆனால் இந்த போட்டி எப்போது நடைபெறுகிறது என்பது குறித்த தகவல் வெளியாக வில்லை.
எனினும் அஜித் ரசிகர்கள் இரண்டாவது சுற்றிலும் அஜித் வென்று வர வேண்டும் என வாழ்த்து கூறி வருகிறார்கள்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.