
விவசாயம் செய்ய போதிய பணம் இல்லாமல் வட்டிக்கு வாங்கும் நிலையிலிருந்த ஏழை விவசாயி ஒருவருக்கு விஜய் சேதுபதி ரசிகர்கள் வயலில் இறங்கி நாற்று நட்டதோடு பண உதவியும் செய்துள்ள செயல் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ‘சங்கத் தமிழன்’பட ரிலீஸுக்கு பேனர் வைக்க வசூலித்த தொகையை இவ்விதம் செலவழித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சுபஸ்ரீ பேனர் துயர சம்பவத்துக்குப் பின் சினிமா ரசிகர்கள் பலரும் பேனர் வைக்க செலவழிக்கும் பணத்தை நற்காரியங்களுக்குப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். அதிலும் குறிப்பாக விஜய் சேதுபதி தனது ரசிகர்களுக்கு அதை ஒரு முக்கிய வேண்டுகோளாகவே வைத்துள்ளார்.
இந்நிலையில் சங்கராபுரம் அருகே உள்ள சிவபுரம் கிராமத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவர் அவருடைய ஒரு ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்ய பணம் இல்லாமல் தவித்து வந்துள்ளார். அதற்கு உதவும்படி கள்ளக்குறிச்சியை சேர்ந்த ஜெய முருகன் என்ற சைக்கிள் கடை உரிமையாளரிடத்தில் தனது விவசாய நிலத்தில் பயிர் செய்ய வட்டிக்கு பணம் கேட்டுள்ளார் பிரகாஷ்.
கள்ளக்குறிச்சி விஜய் சேதுபதி ரசிகர் மன்ற இளைஞர்கள் விஜய் சேதுபதியின் சங்கத் தமிழன் திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில் ரசிகர்கள் பேனர்,போஸ்டர் ,பாலபிஷேகம் போன்றவற்றை தவிர்த்து மாறாக அனைவரும் ஒன்று சேர்ந்து விதை பந்துகள் மரச்செடிகள் என வழங்கத் திட்டமிட்டனர். அந்த சமயத்தில் விவசாயி ஒருவர் விவசாயம் செய்ய பணம் இல்லாமல் வட்டிக்கு பணம் கேட்டு வருவதாக தகவல் கிடைத்ததன் அடிப்படையில் விஜய் சேதுபதி ரசிகர்கள் விவசாயி பிரகாஷைத் தொடர்பு கொண்டனர். பிறகு பிரகாஷை நேரில் சந்தித்து விவசாயத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதி அளித்தனர்.
அதன் பேரில் விவசாயி பிரகாஷின் சொந்த ஊரான சிவபுரத்திற்கு நேரில் சென்று நெல் பயிர் நாற்று நட்டு உழவு செய்து விவசாயி பிரகாஷுக்கு உதவி செய்தனர்.மேலும் பிரகாஷுக்கு முதற்கட்டமாக பத்தாயிரம் ரூபாய் பணம் வழங்கினார். அதே போல டிராக்டர் மூலம் காய்ந்து கிடந்த நிலத்தை உழவு செய்தனர். பிறகு முறையாக பூஜை செய்து விவசாயிக்கு மறியாதை செலுத்தி ஏர் உழுது நாற்று நடத்துவங்கினர்.
அதே போல நெல் பயிரிட தேவையான உரம் உட்பட அனைத்திற்கு விஜய் சேதுபதி ரசிகர்களே செய்தனர். இதனால் பிரகாஷ் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். தன்னுடைய சொந்த நிலத்தில் நெல் பயிரிட வட்டி க்கு பணம் கேட்டு அலைந்த நேரத்தில் தனது விவசாய நிலத்திற்க்கு ஒரு ரூபாய் கூட செலவின்றி களத்தில் இறங்கி விவசாயம் செய்து கொடுத்த விஜய் சேதுபதி ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார். தற்போது இச்செய்தி வலைதளங்களில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.