அடி ஆத்தி அஜித் படத்தில் 'ஆத்மீகா' வா...!

 
Published : Feb 01, 2018, 07:32 PM ISTUpdated : Sep 19, 2018, 01:54 AM IST
அடி ஆத்தி அஜித் படத்தில் 'ஆத்மீகா' வா...!

சுருக்கம்

ajith movie heroine is aathmikaa

விசுவாசம்

அஜித் வீரம், வேதாளம், விவேகம் படங்களை தொடர்ந்து நான்காவது முறையாக சிவாவுடன் இணைந்திருக்கிறார். படத்திற்கு விசுவாசம் என்று பெயரிடப்பட்டுள்ளது.படத்தின் ஷூட்டிங் இன்னும் சில நாட்களில் தொடங்கவிருப்பதாகவும் படத்தை தீபாவளியன்று ரிலீஸ் செய்யவும் திட்டமிட்டிருக்கின்றனர் படக்குழுவினர். 

ஆண்டிற்கு ஒரு படம்

ஏனென்றால், அஜித் தற்போது ஆண்டிற்கு ஒரு படம் நடிக்க முடிவு செய்துள்ளார். அதனால் சீக்கிரமாகவே நடத்தி முடிக்க முடிவு செய்துள்ளனர். இந்நிலையில், இந்த பட அப்டேட் பற்றிய ஒரு செய்தி தீயாக பரவியது.

மீசைய முறுக்கு

மீசைய முறுக்கு படத்தில் ஹிப்பாப் ஆதிக்கு ஜோடி போட்ட ஆத்மீகா, விசுவாசம் படத்தில் நடிப்பதாக செய்திகள் வெளியாயின. இதைத் கேட்ட ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆத்மிகா ஒரு படத்தில் மட்டும் நடித்துள்ளார். அவ்வளவாக பிரபலமும் இல்லை. இதனால் விசுவாசம் படத்தில் ஆத்மீகா வேண்டாம் என மறுத்து பதிவிட்டனர்.

என்னது எப்போ எப்படி

இந்நிலையில் தன்னை பற்றிய வதந்தியை கேள்விப்பட்டதும் ஆத்மீகா ட்விட்டர் மூலம் விளக்கம் அளித்துள்ளார். என்னது? எப்படி? எப்போ என்று வினவியுள்ளார்.

கீர்த்தி சுரேஷ்

இது இப்படி இருக்க விசுவாசம் படத்தில் முன்பு கீர்த்தி சுரேஷ் நடிப்பதாக ஒரு செய்தி பரவியது. அதற்கும் தல ரசிகர்கள் கீர்த்தி சுரேஷ் மட்டும் வேண்டாம் என கெஞ்சுகிறார்கள்.

ஹீரோயின்

இயக்குனர் சிவா வழக்கமாக படத்தின் தலைப்பை தான் தாமதமாக சொல்வார். இந்த தடவை ஹீரோயின் விஷயத்தில் இப்படி செய்வதால் தல ரசிகர்கள் கோபத்தில் உள்ளனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

உயிர் போய் உயிர் வந்துருக்கு!" - பயங்கர கார் விபத்தில் சிக்கிய ரஜினி பட நடிகை நோரா ஃபதேஹி!
ஜவ்வா இழுக்கும் இயக்குநர்; ரொம்பவே ஒர்ஸ்ட்; சிறகடிக்க ஆசை சீரியலை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!