ஸ்ரீதேவி குடும்பத்திற்கு உதவி செய்த அஜித்... இது தான் காரணமாம்...!

 
Published : Mar 14, 2018, 07:03 PM ISTUpdated : Sep 19, 2018, 02:04 AM IST
ஸ்ரீதேவி குடும்பத்திற்கு உதவி செய்த அஜித்... இது தான் காரணமாம்...!

சுருக்கம்

ajith help with sridevi family

பாலிவுட் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டார் என்று பெயர் வாங்கியவர் நடிகை ஸ்ரீதேவி. இவர் கடந்த மாதம் குடும்ப நண்பர் திருமண விழாவிற்க்கு துபாய் சென்ற போது மரணமடைந்தார். இவருடைய மரணத்தை தொடர்ந்து ஸ்ரீதேவியை பற்றி பல்வேறு தகவல் வெளியாகியது. 

திரையுலகில் உள்ள பலருக்கும் பரிச்சியமான இவரது மரணம் ஒட்டுமொத்த திரையுலகினர் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 

இந்நிலையில் சமீபத்தில் சென்னையில் ஸ்ரீதேவிக்கு அஞ்சலி செலுத்தும் விதத்தில் நடத்தப்பட்ட அஞ்சலி கூட்டத்தில் பிரபலங்கள் பலர் கலந்துக்கொண்டு தங்களுடைய அஞ்சலியை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் நடிகர் அஜித்தும் கலந்துக்கொண்டார். 

மேலும் தற்போது சிவா இயக்கத்தில் நடித்து வரும் அஜித் அடுத்ததாக போனி கபூர் தயாரிக்க இருக்கும் படத்தில் நடிப்பதாக கூறி அவருக்கு கால்ஷீட் கொடுத்துள்ளார் என்ற தகவல் வெளியானது அனைவரும் அறிந்ததுதான்.

இதுக்குறித்து தற்போது வெளியாகியுள்ள தகவலில் ஸ்ரீதேவியின் குடும்பம் தற்போது கொஞ்சம் பண நெருக்கடியில் உள்ளதால், அதற்கு தன்னால் முடிந்த உதவியை செய்யும் விதத்தில் அஜித் போனி கபூருக்கு கால்ஷீட் கொடுத்துள்ளதாக பிரபல வார இதழ் செய்தி வெளியிட்டுள்ளது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

தாராவை பகடைக்காயாக பயன்படுத்தி எஸ்கேப் ஆக பார்க்கும் கதிர்... தட்டிதூக்கினாரா கொற்றவை? எதிர்நீச்சல் தொடர்கிறது
கடத்தப்படும் கிரிஷ்... விஜயா மீது முத்துவுக்கு வந்த டவுட்; கடத்தியது யார்? - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்