இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் ‘நேர்கொண்ட பார்வை’ அப்டேட் இதுதான்...

Published : Jul 15, 2019, 12:30 PM ISTUpdated : Jul 15, 2019, 12:31 PM IST
இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் ‘நேர்கொண்ட பார்வை’ அப்டேட் இதுதான்...

சுருக்கம்

ஆகஸ்ட் 10ம் தேதியாக அறிவிக்கப்பட்டு, பின்னர் மீடியாக்களால் ஆகஸ்ட் 1ம் தேதி என்று குழப்பப்பட்ட அஜீத்தின் ‘நேர்கொண்ட பார்வை’யின் உறுதியான ரிலீஸ் தேதியை இன்று மாலை 6 மணிக்கு தயாரிப்பாளர் போனிகபூர் வெளியிடுவார் என்று தெரிகிறது.

ஆகஸ்ட் 10ம் தேதியாக அறிவிக்கப்பட்டு, பின்னர் மீடியாக்களால் ஆகஸ்ட் 1ம் தேதி என்று குழப்பப்பட்ட அஜீத்தின் ‘நேர்கொண்ட பார்வை’யின் உறுதியான ரிலீஸ் தேதியை இன்று மாலை 6 மணிக்கு தயாரிப்பாளர் போனிகபூர் வெளியிடுவார் என்று தெரிகிறது.

தீபாவளிக்கு வெளியாக இருக்கும் விஜய்யின் ‘பிகில்’படத்துக்கும் இன்னும் மூன்றே வாரங்களில் ரிலீஸாகவிருக்கும் அஜீத்தின் நேர்கொண்ட பார்வைக்கும் மத்தியில் ஃபர்ஸ்ட் லுக், போஸ்டர் வெளியிடுவது ,ட்ரெயிலர் மற்றும் டீஸர் வெளியிடுவதில் பலத்த போட்டிகள் நிலவுகின்றன. விஜய்யின் ‘பிகில்’ தீபாவளி ரிலீஸ்தான் என்று உறுதியாகத் தெரிந்துள்ள நிலையில் அஜீத்தின் ‘நேர்கொண்ட பார்வை’யின் ரிலீஸ் தேதியில் இன்னும் குழப்பம் நீடிக்கிறது.

படக்குழுவினர் ஆகஸ்ட் 10 என்று ரிலீஸ் தேதியை அறிவித்திருந்த நிலையில் அது சனிக்கிழமையாக இருக்கிறது. ராசியில்லாத நாள். அதற்கு முந்தைய புதன்,வியாழன், வெள்ளி வசூல்களை ஏன் இழக்க வேண்டும் என்று ஆளாளுக்குக் குழப்பி வந்தனர். இந்நிலையில் இன்று காலை அஜீத் ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தயாரிப்பாளர் போனிகபூர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அது அநேகமாக ரிலீஸ் தேதி தொடர்பானதாகவே இருக்கக்கூடும் என்று தெரிகிறது.

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

லிங்குசாமி கை*து ஆகல! அது தவறான செய்தி, சகோதரரும், வழக்கறிஞரும் சொன்ன முக்கிய தகவல்.....
48 ஆண்டுகால சினிமா பயண நினைவுகளில் ஸ்ரீனிவாசன்; அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு!