இங்க தல ராஜ்ஜியம் மட்டும் தான்... காட்டுத்தனமா கதற விடும் அஜித் ரசிகர்கள்!! இந்தவாட்டியும் சிக்கினது யாரு தெரியுமா?

Published : Aug 13, 2019, 01:05 PM ISTUpdated : Aug 13, 2019, 01:08 PM IST
இங்க தல ராஜ்ஜியம் மட்டும் தான்...  காட்டுத்தனமா கதற விடும் அஜித் ரசிகர்கள்!!  இந்தவாட்டியும் சிக்கினது யாரு தெரியுமா?

சுருக்கம்

நேர்கொண்ட பார்வை கிளாஸ் மட்டுமல்ல மாஸாகவும் மெரட்டிக் கொண்டிருக்கிறது, அதன் வசூலும் போனியை குஷியில் போங்க வைத்துவிட்டது. இந்த தாறுமாறான ஹிட்டினால் அஜித் ரசிகர்கள் குதூகலித்துக் கொண்டிருக்கிறார்கள். 

கடந்த வாரம் ரிலீசான நேர்கொண்ட பார்வை விஸ்வாசம் படத்தைப் போல மாஸ் படமாக இருக்காது! என்று பேசப்பட்ட அத்தனை ரிவீவ்வை அடிச்சு அந்தரத்தில் பறக்க விட்டுக்கொண்டிருக்கிறது. படம் கிளாஸ் மட்டுமல்ல மாஸாகவும் மெரட்டிக் கொண்டிருக்கிறது, அதன் வசூலும் போனியை குஷியில் போங்க வைத்துவிட்டது. இந்த தாறுமாறான ஹிட்டினால் அஜித் ரசிகர்கள் குதூகலித்துக் கொண்டிருக்கிறார்கள். 

படம் வெளியாகும் மூன்றுநாட்களுக்கு முன்பே படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனம் கிடைத்தது. வெளியானதும் வந்த எதிர்மறையான விமர்சன பேச்சுக்களை அடிச்சு துவம்சம் செய்துவிட்டனர் தல அஜித்தின் தாறுமாறான வெறியர்கள். படத்துக்கு மாஸ் ஓப்பனிங் கொடுக்க வேண்டும் என்று நினைத்துத்தான் உள்ளே சென்றனர். ஆனால் படத்தின் வடிவமைப்பும், அஜித்தின் ஆக்‌ஷன் சீக்வென்ஸும், தல பேசும் தரமான டயலாக்குகளும் இந்தப் படத்தை எங்கோ உச்சத்தில் கொண்டு போய் நிறுத்தியிருக்கிறது. வழக்கமாக கைதட்டி விசிலடிக்கும் தல ரசிகர்களை சில இடங்களில் கைகளை கட்டிப்போட்டு பார்க்க வைத்துள்ளார்.

அஜித்தின் நடை, எமோஷனல் டயலாக் என விளைவு, கொண்டாடி தலயை கொண்டாடி தீர்க்கிறார்கள் அஜித்தின் ரசிகர்கள். அவர்கள் மட்டுமா? கொண்டாடுகிறார்கள் பொது ஆடியன்ஸின் ரிசல்ட்டும் இப்படத்துக்கு பெரிதாய் கைகட்டி ,கைதட்டி பார்க்கின்றனர். ஐயோ நீங்க எங்க சாமி என்று பெண்கள் கூட்டம் கூட்டமாக வந்து கை தட்டுவதால் அஜித்தை விட அவரது ரசிகர்களுக்குதான் பயங்கர சந்தோஷப்படுகின்றனர். ஒரே வருஷத்துல ரெண்டு ப்ளாக்பஸ்டர்ஸ்... சும்மாவே ஆடுவோம், இனி சொல்லவா வேணும், Thala60 எதிர்ப்பார்ப்புக்கு அந்த வானம் தான் எல்லை!

இதனால் சமூக ஊடகங்களில் தல-யை போற்றிப் புகழ்பாடி வெறித்தனமான பதிவுகளை போடுவதோடு, வழக்கம்போல் விஜய் அண்ட்கோவையும் வறுத்து பொடி பண்ணியிருக்கின்றனர். ’ப்பாருங்கடா எங்க தல-யை. அவர் கண்ணுல ஏதாச்சும் பயம் தெரியுதான்னு! பட ரிலீஸுக்கு முன்னாடி எவ்ளோ ஸீன் போட்டிங்க. இந்தப் படம் மாஸ் படமில்லை, மசாலா படமில்லை. அவுட்டுதான், ஃபிளாப்புதான்னு. ஆனா சிங்கம் மாதிரி வந்து நிக்கிறாரு பாரு எங்க தல. 

தமிழ் சினிமாவின்  மாஸ் ஓப்பனிங் கிங் எங்காளுதான்னு மறுபடியும் நிரூபிச்சிட்டார் பார்த்தீங்கல்ல ? மாஸ் மசாலா படம்னாலும், கிளாஸ் கதையோட்ட படம்னாலும் எங்க தல தான் டா வசூல் கிங்கு. எவன் பிகிலு சத்தமும் எங்க காதுல கேக்கல...

தமிழ் சினிமா மட்டுமில்ல, கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா என தென்னிந்தியா முழுக்க தல ராஜ்ஜியம் தான். இது எங்க கோட்ட இங்க வந்து வேற யாரும் தர்பார் நடத்த முடியாது! என தர்பார்  படத்தை,   ரஜினியை கன்னாபின்னாவென கலாய்த்து தள்ளியுள்ளனர். எப்போதுமே தல அஜித் ரசிகர்களுக்கும், விஜய் ரசிகர்களுக்கும் இடையில் தான் முட்டல் மோதல் தூள் பறக்கும். ஆனா விஸ்வாசம் படத்தோடு பேட்ட  படம் மோதிய சமயத்தில் ரஜினி மீது பாய்ந்தனர். அதில் கிடைத்த வெற்றியால் இப்போதும் ரஜினியின் தர்பார் படத்தின் மீது தாக்குதல் நடத்துகின்றனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

உயிர் போய் உயிர் வந்துருக்கு!" - பயங்கர கார் விபத்தில் சிக்கிய ரஜினி பட நடிகை நோரா ஃபதேஹி!
ஜவ்வா இழுக்கும் இயக்குநர்; ரொம்பவே ஒர்ஸ்ட்; சிறகடிக்க ஆசை சீரியலை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!