
தடபுடலாக இன்று வெளியாகியுள்ள வலிமை ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில் சில அஜித் ரசிகர்கள் தலைகால் புரியாமல் செய்யும் அலப்பறைகளால் திரையரங்கு உரிமையாளர்கள் மிகுந்த வேதனையில் உள்ளனர்... அஜித் கோட்டை என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் ரோஹிணி திரையரங்கில் தான் இந்த தகாத செயல் அரங்கேறியுள்ளது...அதிகாலை முதல் திரையரங்கு வழக்கத்தை கதறவிட்டு வந்த அஜித் ரசிகர்கள் இறுதியாக அங்குள்ள பல்புகள்..ஷேர்கள் என பலவற்றை உடைத்து நாசமாக்கியுள்ளனர்...இந்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பரவி வருகிறது...ஏற்கனவே வலிமை படத்தின் அப்டேட் கேட்டு அஜித் ரசிகர்கள் செய்த செயலால் மனம் நொந்த அஜித் இது போன்ற செயலில் ஈடுபட வேண்டாம் என அறிக்கையே வெளியிட்டிருந்தார்.. இந்நிலையில் படம் வெளியான முதல் நாளே ரசிகர்களின் இந்த கொடூர செயல் அஜித் பெயருக்கு கலங்கத்தை ஏற்ப்படுத்த கூடும் என்பதை ரசிகர்கள் மறக்க கூடாது...
போனிகபூர் தயாரிப்பில் அஜித் நடித்துள்ள படம் வலிமை. எச்.வினோத் இயக்கி உள்ள இப்படத்தில் நடிகர் அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இப்படத்தில் ஹீரோயினாக காலா பட நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார். 2 ஆண்டு காத்திருப்புக்கு பின் இப்படம் வெளியாகி உள்ளதால் ரசிகர்கள் மிகவும் ஆரவாரத்துடன் கொண்டாடி வருகின்றனர்.
கடந்த 2019-ம் ஆண்டே தொடங்கப்பட்ட இப்படம் இரண்டு ஆண்டுகள் கடின உழைப்புக்கு பின் இன்று உலகமெங்கும் ரிலீசாகி உள்ளது. இது தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 4 மொழிகளில் வெளியாகி உள்ளது. இன்று காலை 4 மணிக்கு வலிமை படத்தின் முதல் காட்சி திரையிடப்பட்டது. அதிகாலையிலேயே தியேட்டர்கள் முன்பு குவிந்த ரசிகர்கள் பட்டாசுகள் வெடித்தும், அஜித்தின் கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்தும் ஆரவாரமாக கொண்டாடினர்.
சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகினி திரையரங்கில் இன்று காலை 4 மணிக்கு வலிமை படத்தின் முதல் காட்சி திரையிடப்பட்டது. இதற்காக அதிகாலையில் இருந்தே தியேட்டர் முன் குவிந்த அஜித் ரசிகர்கள் ஆட்டம், பாட்டம் என கொண்டாடி மகிழ்ந்தனர்.
ரோகினி தியேட்டர் முன் வைக்கப்பட்டுள்ள அஜித்தின் பிரம்மாண்ட கட் அவுட்டிற்கு பாலாபிஷேகம் செய்வதற்காக பால் வண்டியில் இருந்து அஜித் ரசிகர்கள் திருடிய சம்பவம் நடந்துள்ளது. அந்த வழியாக சென்ற பால் வண்டியில் ஏறி அதில் இருந்த பாக்கெட்டுகளை அஜித் ரசிகர்கள் திருடிய காட்சிகள் வீடியோவில் இடம்பெற்றுள்ளன. ஆனால் திருடிய பின்னர் தான் அது பால் பாக்கெட் அல்ல தயிர் பாக்கெட் என தெரிய வர அஜித் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்திருக்கிறார்கள். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.