Valimai FDFS : கட்-அவுட்டுக்கு ஊற்ற.... பால் வண்டியில் திருடிய அஜித் ரசிகர்கள் - வைரலாகும் வீடியோ

By Ganesh AsianetFirst Published Feb 24, 2022, 10:35 AM IST
Highlights

சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகினி திரையரங்கில் இன்று காலை 4 மணிக்கு வலிமை படத்தின் முதல் காட்சி திரையிடப்பட்டது. இதற்காக அதிகாலையில் இருந்தே தியேட்டர் முன் குவிந்த அஜித் ரசிகர்கள் ஆட்டம், பாட்டம் என கொண்டாடி மகிழ்ந்தனர்.

போனிகபூர் தயாரிப்பில் அஜித் நடித்துள்ள படம் வலிமை. எச்.வினோத் இயக்கி உள்ள இப்படத்தில் நடிகர் அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இப்படத்தில் ஹீரோயினாக காலா பட நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார். 2 ஆண்டு காத்திருப்புக்கு பின் இப்படம் வெளியாகி உள்ளதால் ரசிகர்கள் மிகவும் ஆரவாரத்துடன் கொண்டாடி வருகின்றனர்.

கடந்த 2019-ம் ஆண்டே தொடங்கப்பட்ட இப்படம் இரண்டு ஆண்டுகள் கடின உழைப்புக்கு பின் இன்று உலகமெங்கும் ரிலீசாகி உள்ளது. இது தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 4 மொழிகளில் வெளியாகி உள்ளது. இன்று காலை 4 மணிக்கு வலிமை படத்தின் முதல் காட்சி திரையிடப்பட்டது. அதிகாலையிலேயே தியேட்டர்கள் முன்பு குவிந்த ரசிகர்கள் பட்டாசுகள் வெடித்தும், அஜித்தின் கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்தும் ஆரவாரமாக கொண்டாடினர். 

சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகினி திரையரங்கில் இன்று காலை 4 மணிக்கு வலிமை படத்தின் முதல் காட்சி திரையிடப்பட்டது. இதற்காக அதிகாலையில் இருந்தே தியேட்டர் முன் குவிந்த அஜித் ரசிகர்கள் ஆட்டம், பாட்டம் என கொண்டாடி மகிழ்ந்தனர்.

இந்நிலையில், ரோகினி தியேட்டர் முன் வைக்கப்பட்டுள்ள அஜித்தின் பிரம்மாண்ட கட் அவுட்டிற்கு பாலாபிஷேகம் செய்வதற்காக பால் வண்டியில் இருந்து அஜித் ரசிகர்கள் திருடிய சம்பவம் நடந்துள்ளது. அந்த வழியாக சென்ற பால் வண்டியில் ஏறி அதில் இருந்த பாக்கெட்டுகளை அஜித் ரசிகர்கள் திருடிய காட்சிகள் வீடியோவில் இடம்பெற்றுள்ளன. ஆனால் திருடிய பின்னர் தான் அது பால் பாக்கெட் அல்ல தயிர் பாக்கெட் என தெரிய வர அஜித் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்திருக்கிறார்கள். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படியுங்கள்... Valimai Review : தட்டித்தூக்கினாரா அஜித்?... வலிமை worth-ஆ... இல்லையா? - முழு விமர்சனம் இதோ

நேத்து அவ்ளோ சொல்லியும் கேக்கல திருட்டு கும்பல் 🤦😂https://t.co/wY7EYrAVdQ pic.twitter.com/REfDmjlOrW

— MᴇʀsᴀʟSʀɪɴɪ ᴮ̃ᴱ̃ᴬ̃ˢ̃ᵀ̃ (@Srini_VJFan)
click me!