சர்கார் சாதனையை முறியடிக்க அஜித் ரசிகர்களின் அமர்க்களமான ஏற்பாடு!

Published : Dec 29, 2018, 02:00 PM IST
சர்கார் சாதனையை முறியடிக்க அஜித் ரசிகர்களின் அமர்க்களமான  ஏற்பாடு!

சுருக்கம்

சர்கார் படம் ரிலீஸ் ஆன நேரத்தில் கேரளாவில் விஜய் ரசிகர்கள் 175 அடி கட்-அவுட் வைத்து தங்களது பலத்தை காட்டினார். தற்போது அந்த சாதனையை முறியடிக்கும் விதமாக உருவாகி வருகிறது அஜித்தின் 200 அடி நீள பேனர் வைக்க தயாராகி வருகின்றனர்.  

விஸ்வாசம் படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் டீசர் மற்றும் ட்ரெய்லருக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். விரைவில் டீசர் மற்றும் ட்ரெய்லர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர் பார்த்து காத்திருப்பது ஒரு பக்கம் இருந்தாலும் இப்போதே கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகின்றனர்.

சிவா இயக்கத்தில் நான்காவது முறையாக இணைந்துள்ள விஸ்வாசம் படம் சுமார் ஒன்றரை வருடத்துக்கு பின் வெளிவருவதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த படம் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இன்னும் 12 நாட்களே உள்ள நிலையில், உலகம் முழுவதும் உள்ள அஜித் ரசிகர்கள் இப்போதே கொண்டாட்டத்துக்கு தயாராகி வருகின்றனர்.

இந்த நிலையில் திருச்செந்தூர் அருகே அஜித் ரசிகர்கள் 200 அடியில் பேனர் வைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். அதற்கான பணிகளும் மும்முரமாக நடைபெற்றுவருகின்றன. இந்த பேனர் 20 அடி அகலம் கொண்டது என்றும் 200 அடி நீளம் கொண்டது என்றும் கூறப்படுகிறது. 

ஏற்கனவே விஜய் நடித்த சர்கார்  படம் வெளியானபோது கேரளாவில் கொல்லம்  விஜய் ரசிகர்கள் 175 அடி கட்-அவுட் வைத்து திருவிழா போல கொண்டாடினர். அந்த சாதனையை முறியடிக்கும் விதமாக அஜித்தின் 200 அடி நீள பேனர் வைக்க உள்ளனர். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸியை சந்தித்த பாலிவுட் ‘பாட்ஷா’ ஷாருக்கான் - வைரலாகும் வீடியோ
தனுஷை தொடர்ந்து விவாகரத்து சர்ச்சையில் சிக்கிய செல்வராகவன்..?