
நடிகர் அஜித் கோலிவுட் திரையுலகில் தனக்கென மிகப் பெரிய ரசிகர் கூட்டத்தை வைத்திருப்பவர் என்பது பலருக்கும் தெரியும். இவர் ரசிகர்மன்றத்தைக் கலைத்தாலும், இவருடைய ரசிகர்கள் தொடர்ந்து அஜித் நற்பணி மன்றம் என்கிற பெயரில் தொடர்ந்து பல்வேறு உதவிகளைச் செய்து வருகின்றனர்.
தல அஜித்திற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தீவிர ரசிகர்கள் இருந்தாலும், மதுரை ரசிகர்கள் ஒவ்வொரு முறையும் எங்களைப் போல் வருமா? என பல வித்தியாசங்களைச் செய்து காட்டுவார்கள். அஜித் படம் குறித்து எந்த தகவல் வெளிவந்தாலும் அதனை போஸ்டர் அடித்து ஒட்டி பிரபலப்படுத்துவதில் கண்டிப்பாக மதுரை ரசிகர்களுக்கு ஒரு தனி இடம் உண்டு.
இவர்களுடைய செயல் தற்போது சற்றே அத்துமீறியுள்ளது என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. காரணம் இவர்கள் போஸ்டரில் தற்போது புதிதாக இணைந்துள்ளார் அஜித்தின் மகள் அனோஷ்கா. இந்த போஸ்டர் ஒட்டப்பட்டதும் பலர் அதிர்ச்சி அடைந்தனர்.
அஜித்தின் மகள் புகைப்படத்தை ஜெயலலிதாவின் படத்தைப் போல் கெட்டப் மாற்றி, இவர்கள் போஸ்டர் அடித்திருந்தனர். இந்தச் செயலைச் செய்தது அஜித் ரசிகர்கள் தான் என்றாலும் ரசிகர்கள் பலரும் இதனை விரும்பவில்லை என்றே கூறப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.