’நேர்கொண்ட பார்வை’க்காக தனது பல்லாண்டு பார்வையை மாற்றிக்கொண்ட தல அஜீத்...அதிர்ந்த படக்குழு...

Published : Aug 06, 2019, 09:22 AM IST
’நேர்கொண்ட பார்வை’க்காக தனது பல்லாண்டு பார்வையை மாற்றிக்கொண்ட தல அஜீத்...அதிர்ந்த படக்குழு...

சுருக்கம்

பல வருடங்களாக பத்திரிகையாளர்களை சந்திப்பதையே ஒரு கவுரவக்குறைச்சலாக நினைத்து வந்த நடிகர் அஜீத், அனைவரும் ஆச்சரியம்கொள்ளும்படி தனது ‘நேர்கொண்ட பார்வை’படத்தின் பத்திரிகையாளர் காட்சியை இரு தினங்களுக்கு முன்பே போடும்படி தயாரிப்பாளருக்கு வேண்டுகோள் வைத்துள்ளார். அதன்படி இப்படம் இன்று காலை 10 மணிக்கு பத்திரிகையாளர்களுக்கான சிறப்புக் காட்சி திரையிடப்படுகிறது.

இந்தி படமான,பிங்க்நேர்கொண்ட பார்வைஎன்ற தலைப்பில் தமிழில் ரீமேக் ஆகியுள்ளது. அமிதாப் நடித்த வழக்கறிஞர் கேரக்டரில் அஜித்குமார் நடித்துள்ளார். வித்யாபாலன், ஸ்ரத்தா ஸ்ரீநாத், ரங்கராஜ் பாண்டே, டெல்லிகணேஷ் உட்பட பலர் நடித்துள்ளனர். இதைசதுரங்க வேட்டைதீரன் அதிகாரம் ஒன்றுபடங்களை இயக்கிய ஹெச்.வினோத் இயக்கியுள்ளார்.போனி கபூர் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். 

இந்த திரைப்படம் வரும் வியாழன் அன்று வெளியாகவுள்ளது. பல திரையரங்குகளில் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ள நிலையில் டிக்கெட்டுகள் சற்று மந்தமாகவே நகர்கின்றன. படத்தில் அஜீத்துக்கு முக்கியத்துவம் இல்லை என்று பரவிய செய்திகளால் இந்நிலை ஏற்பட்டுள்ளதாக படக்குழு அஜீத்துக்குத் தெரிவித்துள்ள நிலையில் அது இல்லை என்பதை இரு தினங்களுக்கு முன்பே இக்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இந்தியா மட்டுமின்றி மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளிலும் நேர்கொண்ட பார்வை திரைப்படம் வெளியாகவுள்ளது.இந்நிலையில் படத்தின் சிறப்புக்காட்சி இன்று சிங்கப்பூரில் திரையிடப்பட உள்ளது. இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர், என் மனைவி ஸ்ரீதேவியின் கனவை நிஜமாக்கியுள்ளேன். இது அஜித், வினோத் மற்றும் படக்குழுவினரின் ஒத்துழைப்பு இல்லாமல் சாத்தியம் இல்லை. இதை நான் எப்போதும் போற்றுவேன் என தெரிவித்துள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Top 10 Big Budget Movies: கோடி கோடியாய் கொட்டி எடுக்கப்பட்ட இந்தியாவின் டாப் 10 மெகா பட்ஜெட் மூவீஸ்!
Keerthy Suresh: ஒரு பாட்டுக்கு 1 கோடி சம்பளமா? காட்டுத்தீ போல் பரவிய தகவல்... 'தி பாரடைஸ்' படக்குழு விளக்கம்