வலிமைக்கு பிறகு அஜித் - வினோத் கூட்டணி மீண்டும் இணையவுள்ளதாகவும், மங்காத்தா படத்தில் வந்தது போல வில்லன் ரோலில் அஜித் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்தி திரைப்படமான ‘பிங்க்’ படத்தின் தமிழ் ரீமேக்கான ‘நேர்கொண்ட பார்வையின்’ வெற்றிக்கு பிறகு இரண்டாவது முறையாக அஜித் - வினோத் இணைந்து ‘வலிமை’ திரைப்படத்தினை எடுத்துள்ளனர். பொங்கலுக்கு ரிலீஸ் என்று அறிவித்துள்ள படக்குழு, வலிமை இறுதிக்கட்ட பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.வலிமை படம் முடிந்துள்ளதால், அஜித்தின் அடுத்த புதிய படம் பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவுகிறது. இந்த படம் பற்றிய சில செய்திகள் கசிந்துள்ளது.
அதன்படி, அஜித் மீண்டும் வினோத்துடன் மூன்றாவது முறையாக இணைய உள்ளதாக கூறப்படுகிறது.வலிமை படத்தை தயாரித்த போனி கபூர் இதனை தயாரிக்க உள்ளார். மங்காத்தா படத்தில் வந்தது போல வில்லன் ரோலில் அஜித் நடிக்க உள்ளார். ஏற்கனவே அஜித் வில்லனாக நடித்த பில்லா , மங்காத்தாபோன்ற படங்கள் சூப்பர் ஹிட் அடித்தது. மீண்டும் அஜித் வில்லனாக நடிக்க இருப்பதாக கூறப்படுவதால் இந்த படத்தின் மீது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.மொத்தத்தில் வலிமைக்கு பிறகு பெரிய ட்ரீட் தல அஜித் ரசிகர்களுக்கு காத்திருக்கிறது.