
பாலிவுட் நடிகையான தபு, நான் திருமணம் செய்யாததற்கு அவர் தான் காரணம் என்று தெரிவித்து உள்ளார்
இந்தியில் மிகவும் பிரபலமான தபு, தமிழில் பல படங்களில் நடித்து உள்ளார். இவர் சிறைசாலை, காதல்தேசம், இருவர் உள்ளிட்ட பல படங்களில் நடித்து உள்ளார். இவருக்கு வயது 46.
இந்நிலையில் இவர் ஒரு நிகழ்ச்சியில் பேட்டி அளித்த போது, நான் திருமணம் செய்துக்கொள்ளாமல் தான் இருக்கிறேன்.
இப்படி இருப்பதால் தான் நான் வாழ்வில் மகிழ்ச்சியாக இருக்கிறேன். ஆனால் என்னிடம் கேட்கும் பலபேர், திருமண வாழ்க்கை சிறந்ததா ..? அல்லது தனியாக வாழ்வதே சிறந்ததா என்று கேட்கிறார்கள்...
என்னை பொறுத்தவரையில், திருமணம் ஆகாமல் இதுவரை நான் மகிழ்ச்சியாக தான் உள்ளேன்...வாழ்வில் முதல்பாதி எனக்கு தெரியும்..அடுத்த பாதி என்பது நான் அனுபவிக்காத வாழ்க்கை..ஒரு வேளை, திருமணம் நடந்து இருந்தால் அந்த வாழ்க்கை சிறந்ததா என்ற கேள்விக்கு பதில் அளித்திருக்க முடியும் என அவர் தெரிவித்து இருந்தார்
மேலும் பேசிய தபு, தனக்கு திருமணம் ஆகாததற்கு காரணம் நடிகர் அஜய் தேவ்கன் தான் என கூறி அனைவரையும் அதிர்ச்சியில் மூழ்க வைத்தார்.
அவர் என்னுடன் இருந்த தருணங்கள் என்னால் மறக்க முடியாது ..என்னுடன் அவர் இருந்த தருணங்களை அவரும் உணர்வார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.