விஷ்ணு விஷாலின் 'மோகன்தாஸ்' படத்திற்கு குட் - பை சொன்ன ஐஸ்வர்யா ராஜேஷ்..!

Published : Jul 07, 2021, 07:12 PM IST
விஷ்ணு விஷாலின் 'மோகன்தாஸ்' படத்திற்கு குட் - பை சொன்ன ஐஸ்வர்யா ராஜேஷ்..!

சுருக்கம்

'மோகன் தாஸ்' படத்தில் நாயகியாக நடித்து வந்த ஐஸ்வர்யா ராஜேஷ் தன்னுடைய படப்பிடிப்பை முடித்து கொடுத்து விட்டார். இவரது கடைசி நாள் ஷூட்டிங்கான இன்று படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடி இவரை வழியனுப்பியுள்ளனர்.

வித்தியாசமான கதைக்களங்களைத் தேர்வு செய்து நடித்து, தமிழ்த் திரையுலகில் தன்னை நிலை நிறுத்தியவர் விஷ்ணு விஷால். அந்த வகையில் இவர் நடித்து தயாரித்து வரும் திரைப்படமான 'மோகன் தாஸ்' படத்தில் நாயகியாக நடித்து வந்த ஐஸ்வர்யா ராஜேஷ் தன்னுடைய படப்பிடிப்பை முடித்து கொடுத்து விட்டார். இவரது கடைசி நாள் ஷூட்டிங்கான இன்று படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடி இவரை வழியனுப்பியுள்ளனர்.

'மோகன்தாஸ்' படத்தின் அறிமுக டீஸர் கொரோனா ஊரடங்கு சமயத்திலேயே வெளியிடப்பட்டது. அப்போதே பார்வையாளர்களுக்கு ஒரு வித்தியாசமான த்ரில்லரைக் காணவுள்ளோம் என்பதை உணர்த்தியது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்தது. கொரோனா இரண்டாவது அலைக்கு பின் தமிழக அரசு ஷூட்டிங் பணிகளுக்கு அனுமதி கொடுத்த பின் தொடர்ந்து, இந்த படத்தின் பணிகள் நடந்து வந்த நிலையில் தற்போது ஐஸ்வர்யா ராஜேஷின் காட்சிகள் அனைத்தும் எடுத்து முடிக்கப்பட்டு, அவரும் மிகவும் சந்தோஷமாக படக்குழுவினருக்கு குட்பை கூறியுள்ளார்.

'மோகன்தாஸ்' படத்தை 'களவு' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான முரளி கார்த்திக் இயக்குகிறார். இந்தப் படம்  ஒரு எமோஷனல் த்ரில்லர் பாணியிலான கதையம்சமாகும். பார்வையாளர்களுக்குக் கண்டிப்பாக ஒரு வித்தியாசமான அனுபவமாக இருக்கும் என்று படக்குழு நம்பிக்கை கொடுத்துள்ளது. மேலும் இந்த படத்தில் வித்தியாசமான கதைகள் வந்தால் தமிழில் நடிக்கும் இந்திரஜித் சுகுமாரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன்பூர்ணிமா பாக்யராஜ், கருணாகரன்,அக்‌ஷய் ராதாகிருஷ்ணன்,ஷாரிக், லாலு, பிரகாஷ் ராகவன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஐட்டம் டான்ஸுக்காகவே ஆட்டநாயகியை தேடிப் பிடிக்கும் நெல்சன்: ஜெயிலர் 2, ரஜினி ஃபீலிங்க்ஸ் நிறைவேறுமா?
சாப்பாட்டுக்காகவே போகிறோம்; கல்யாண வீட்டில் ஏன் கரண் ஜோஹர் சாப்பிடுவதில்லை? காரணம் என்ன?