
இயக்குநர் ஹரியின் இயக்கத்தில், சீயான் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் ‘சாமி ஸ்கொயர் ’ படத்தில் திரிஷாவிற்கு பதிலாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வருகிறார்.
‘சாமி ஸ்கொயர் ’படத்தின் ஃபர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டர் மற்றும் டிரைலர் வெளியாகி பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது. மில்லியன் கணக்கிலான ரசிகர்களின் ஆதரவைப் பெற்று இன்றும் இணையத்தில் டிரெண்டிங்கில் இருக்கும் சாமி ஸ்கொயர் படத்திற்கான எதிர்பார்ப்பு தற்போது மேலும் அதிகரித்திருக்கிறது.
சாமி ஸ்கொயர் படத்தில் திரிஷாவிற்கு பதிலாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்திருக்கிறார். நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் செக்க சிவந்த வானம், துருவ நட்சத்திரம் உள்ளிட்ட பல படங்களில் முன்னணி இயக்குநர்களின் இயக்கத்தில் நடித்திருப்பவர். தமிழ் திரையுலகில் நடிப்பு திறன் அதிகமுள்ள நடிகைகளின் பட்டியலில் இவருக்கும் இடமுண்டு. இவரின் திறமையை உணர்ந்த இயக்குநர் ஹரி சாமி படத்தின் முதல் பாகத்தில் திரிஷா நடித்த கேரக்டரில் இவரை நடிக்க வைத்திருக்கிறார்.
இயக்குநர் ஹரி, இவருக்கும் சீயான் விக்ரமிற்கும் இடையேயான காட்சிகளையும், பாடல் காட்சிகளையும் தற்போது பழனி உள்ளிட்ட பல பகுதிகளில் முகாமிட்டு படமாக்கி வருகின்றார்.
இந்த படத்தில் விக்ரமுடன் கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், பிரபு, பாபி சிம்ஹா,சூரி, இமான் அண்ணாச்சி, ஜான் விஜய் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
ராக் ஸ்டார் தேவி ஸ்ரீபிரசாத் இசையமைப்பில் உருவான இப்படத்தின் பாடல்கள் ஹிட்டடிக்கும் என்று இப்போதே சொல்லத் தொடங்கியிருக்கிறார்கள் திரையுலகினர். விரைவில் இப்படத்தின் சிங்கிள் ட்ராக்கும், அதனைத் தொடர்ந்து இசை வெளியீடும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்தை தமீன் பிலிம்ஸ் சார்பில் ஷிபு தமீன் ஏராளமான பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.