விஜய் பாணியில் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை... ரஜினி ரசிகர்கள் அதிரடி அறிவிப்பு

By Ganesh A  |  First Published Jul 17, 2023, 12:35 PM IST

நடிகர் விஜய் சமீபத்தில் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கியது போல், தாங்களும் வழங்க இருப்பதாக ரஜினி ரசிகர்கள் அறிவித்துள்ளனர்.


நடிகர் ரஜினிகாந்த் நடித்து ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளிவர உள்ள ஜெயிலர் திரைப்படத்தை வெற்றி படமாக மாற்ற தூத்துக்குடி மாவட்ட ரஜினிகாந்த் தலைமை ரசிகர் நற்பணி மன்றம் முடிவு செய்து ரூபாய் 4.50 லட்சம் மதிப்பிலான கல்வி உதவி தொகைகளை வழங்க உள்ளதாக அறிவித்து உள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 10ஆம் தேதி திரைக்கு வெளிவர உள்ளது  ஜெயிலர் திரைப்படத்தின் முதல் பாடல் காட்சி வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஜெயிலர் திரைப்படத்தை வெற்றி படமாக ஆக்குவது குறித்து தூத்துக்குடி மாவட்ட ரஜினிகாந்த் தலைமை ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட பொறுப்பாளர் விஜய் ஆனந்த் மாவட்ட வழக்கறிஞர் செந்தில் ஆறுமுகம் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. 

Tap to resize

Latest Videos

இதையும் படியுங்கள்... ஜவான் படத்தில் நடிக்க காரணம் என்ன?.. மனம் திறந்த மக்கள் செல்வன் - அதுல அவர் சொன்ன ஒரு விஷயம் தான் ஹை லைட்!

இந்த கூட்டத்தில் மாநகரம், நகரம், ஒன்றியம் உள்ளிட்ட மாவட்ட முழுவதும் இருந்து ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஜெயிலர் திரைப்படத்தை மாபெரும் வெற்றி படமாக ஆக்க ரசிகர்கள் பல்வேறு நடவடிக்கையில் ஈடுபடுவது குறித்து முடிவு செய்யப்பட்டது. படம் திரையிடப்படும் ஆகஸ்ட் 10ஆம் தேதி தூத்துக்குடி மாநகர முழுவதும் விழாக்கோலம் காணும் வகையில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படும்.

மேலும் ஜெயிலர் படம் வெளிவருவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பாக மாணவ மாணவியருக்கு கல்வி உதவித்தொகை மற்றும் பல்வேறு உதவிகள் வழங்கும் வகையில் ரூபாய் நாலரை லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகி ஜெயபால் லட்சுமணன் கண்ணன் மாநகர செயலாளர் வெலிங்டன் மாவட்ட மீனவர் அணி அருள் ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

இதையும் படியுங்கள்... தலைவலியாக மாறிய தலைப்பு... ரஜினியின் ஜெயிலர் படத்துக்கு கடைசி நேரத்தில் வந்த சிக்கல் - டைட்டில் மாற்றமா?

click me!