ஒரு பான் இந்திய திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படம், பாலிவுட் மற்றும் கோலிவுட் ரசிகர்களால் பெரிய அளவில் எதிர்பார்க்கப்படுகிறது.
முதல்முறையாக பாலிவுட் சென்றுள்ள இயக்குனர் அட்லி, பாலிவுட்டு உலகின் பாட்ஷா சாருக்கான் அவர்களை வைத்து இயக்கியுள்ள திரைப்படம் தான் ஜவான். அண்மையில் இந்த திரைப்படத்தின் ஒரு Preview காட்சி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஹிந்தி மட்டுமல்லாமல் தமிழ் உள்பட இந்திய மொழிகள் பலவற்றுள் இந்த படம் வெளியாகவுள்ளது. ஒரு பான் இந்திய திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படம், பாலிவுட் மற்றும் கோலிவுட் ரசிகர்களால் பெரிய அளவில் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இந்த படத்தில் தான் இணைந்ததற்கான காரணத்தை குறித்து மனம் திறந்து உள்ளார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. அண்மையில் அவர் பங்கேற்ற ஒரு விழாவில் ஜவான் திரைப்படம் பற்றி அவரிடம் கேட்டபொழுது ஷாருக்கானுக்காக தான் இந்த திரைப்படத்தை ஒப்புக்கொண்டேன் என்று கூறியுள்ளார்.
அவருடன் பணியாற்றுவது, நான் தவற விட முடியாத ஒரு வாய்ப்பாக கருதுகிறேன். எனக்கு இந்த படத்திற்காக சம்பளமே தராமல் இருந்திருந்தாலும் பைசா வாங்காமல் இந்த திரைப்படத்தில் நிச்சயம் நடித்திருப்பேன் என்று கூறியுள்ளார். தனக்கு ஷாருக்கான் மிகவும் பிடிக்கும் என்றும், இந்த திரைப்படத்தில் ஒரு நல்ல கதாபாத்திரம் ஏற்று நடித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன் என்றும் விஜய் சேதுபதி கூறியுள்ளார்.
அனிருத் இசையில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் வருகின்ற செப்டம்பர் மாதம் 7ம் தேதி உலக அளவில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நீ விதைத்த வினையெல்லாம் உனை அறுக்க காத்திருக்கும்... காதல் மோசடியில் சிக்கிய விக்ரமனை சீண்டிய அசீம்