மீண்டும் காலா படத்திற்க்காக மும்பையில் கால் வைக்கிறார் ரஜினி...

 
Published : Jun 20, 2017, 04:22 PM ISTUpdated : Sep 19, 2018, 12:46 AM IST
மீண்டும் காலா படத்திற்க்காக மும்பையில் கால் வைக்கிறார் ரஜினி...

சுருக்கம்

Again rajini is going to mumbai for kaala film

ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் காலா திரைப்படத்தின் படப்பிடிப்புக் காட்சிகள் மே இறுதியில் தொடங்கியது. ஷூட்டிங்கில் கலந்து கொள்வதற்காக மும்பை சென்ற ரஜினி அங்கு சில போர்சன்களை முடித்து விட்டு மீண்டும் சென்னை திரும்பினார்.

ரஜினியின் பொலிடிக்கல் என்ட்ரி குறித்து மூச்சுக்கு முந்நூறு முறை முழங்கி வந்த ஊடகங்கள், அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மீதான குதிரை பேர விவகாரத்தை அடுத்து, ரஜினி குறித்த அப்டேட்டுகளை பெட்டிச் செய்தியாக்கி விட்டன.

வீரியம் குறைந்திருந்த ரஜினி குறித்த பேச்சுகளுக்கு நேற்று எரிசக்தி ஊட்டினார் இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத். தமிழருவி மணியன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித்  தலைவர் தொல்.திருமாவளவன் வரிசையில், ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என்று குரல் கொடுத்தவர்.

ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம். அரசியலுக்கு வருவது குறித்து ஆலோசித்து வருவதாக ரஜினி கூறினார். அதற்கான ஏற்பாடுகளை அவர் செய்து வருகிறார். நாட்டு மக்களுக்கு சேவை செய்வதே ரஜினியின் எண்ணம். ரஜினி சிங்கமாக சிங்கிளாக அசியலுக்கு வருவார். அவரது தலைமையல் கூட்டணி அமைத்து, ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். என்று கூறி தெரிவித்திருந்தார்.

இப்படி தான் எதுவும் பேசாவிட்டாலும், தன்னைச் சந்திப்பவர்கள் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து பேசும் கருத்துக்களை தனக்கான பலமாகவே அவர் கருதி வருகிறார். இந்தச் சூழலில் விடுமுறையை முடித்தக் கொண்டுள்ள ரஜினி நாளை மீண்டும் மும்பை புறப்பட்டுச் செல்ல உள்ளார்.

ரஜினியின் மும்பை வருகையைத் தொடர்ந்து கடந்த முறையைப் போல இந்தமுறையும் எந்தக் காட்சிகளும் டயலாக்குகளும் வெளியாகக் கூடாது என்பதில் படப்பிடிப்புக் குழு மிகுந்த எச்சரிக்கையுடன் தனது பணியைத் தொடங்கியுள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கம்பீரமாக எண்ட்ரி கொடுத்த பாஸ் கார்த்திக்- சூடுபிடிக்க தொடங்கிய கார்த்திகை தீபம்; கொண்டாடும் ஃபேன்ஸ்!
ஜன நாயகன் லேட்டஸ்ட் அப்டேட்: மீண்டும் ஒரு மெர்சல் மேஜிக்? இரண்டு கெட்டப்பில் மிரட்டப்போகும் விஜய்?