சனாதனத்திற்கு எதிராக உதயநிதி பேசியது சர்ச்சையான நிலையில், தற்போது பிரகாஷ் ராஜும் சனாதனத்தை எதிர்த்து டுவிட் போட்டு பரபரப்பை கிளப்பி உள்ளார்.
சனாதன தர்மம் மலேரியா, டெங்கு போன்றது, இதை எதிர்த்தால் மட்டும் போதாது, முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் கூறியிருந்தார். சனாதனத்தை எதிர்க்கும் விதமாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறிய இந்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இது ஒருபுறம் இருக்க, நடிகர் பிரகாஷ் ராஜும் தன் பங்கிற்கு சனாதனத்தை எதிர்த்து தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டு பரபரப்பை கிளப்பி உள்ளார்.
அந்த டுவிட்டில் இந்துக்கள் தானா தனியர்கள் அல்ல. ஆனால் தனாதனிகள் தேச விரோதிகள் என்று பிரகாஷ் ராஜ் ட்வீட் செய்துள்ளார். இதுமட்டுமில்லாமல் பெரியார், டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் தங்கள் கையை முறுக்கியபடி இருக்கும் புகைப்படத்தையும் அவர் தனது டுவிட்டில் பதிவிட்டு இருக்கிறார். சனாதன தர்மத்தை கேலி செய்ய இடதுசாரிகள் உட்பட சிலரால் பயன்படுத்தப்படும் ஒரு சொல் தான் தனாதனி அல்லது தனாதனிஸ். அதே வார்த்தையை பிரகாஷ் ராஜும் தன்னுடைய டுவிட்டில் பயன்படுத்தியுள்ளார்.
இதையும் படியுங்கள்... மன்னிப்பு கேள்.. போலீசில் புகார்.. 10 ஆண்டு பிளாஷ்பேக்.. சனாதனம் பற்றி உதயநிதி பேச்சுக்கு தலைவர்கள் ரியாக்சன்
அம்பேத்கர் இந்து மதத்திலிருந்து புத்த மதத்திற்கு மாறியவர். அவரின் இந்த நடவடிக்கையால் அவர் இந்து மதத்திற்கு எதிரானவர் என கூறுகின்றனர். அதுமட்டுமின்றி, பெரியார் தனது வாழ்நாள் முழுவதும் இந்து மதத்தையும், இந்துக் கடவுளையும் எதிர்த்து வந்தவர். அவர்கள் இருவரின் புகைப்படத்தையும் பயன்படுத்தி பிரகாஷ் போட்டுள்ள இந்த டுவிட் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Hindu s ar not .. Tanathanis are .. RT if you agree. Happy Sunday to all pic.twitter.com/3GZYXdVygg
— Prakash Raj (@prakashraaj)இந்த டுவிட்டை பார்த்த பலரும் பிரகாஷ் ராஜ் மீது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர். இதுதவிர மற்றொரு டுவிட்டில் புது நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் மடாதிபதிகளுடன் பிரதமர் மோடி எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பதிவிட்டு, எதிர்காலத்தில் தனாதனி நாடாளுமன்றம்... குடிமகன்களே இது உங்களுக்கு ஓகேவா என கேட்டு பதிவிட்டுள்ளார் பிரகாஷ் ராஜ். அவர் சனாதனத்தை கிண்டலடித்து தொடர்ந்து டுவிட் செய்து வருவது பேசு பொருள் ஆகி உள்ளது.
Back to the Future ..a parliament.. dear CITIZENS are you okay with this… pic.twitter.com/N57FU1Q5gi
— Prakash Raj (@prakashraaj)இதையும் படியுங்கள்... 6 பேர நான் ஏமாத்திருக்கேன்னா, நீ 7வதா நாமம் போட்டுக்க வந்தியா - சீமானை டார் டாராக கிழித்த விஜயலட்சுமி