பிறரைக் கலாய்ப்பதைத் தவிர வேறு எந்த அறிவுமே இல்லாத எருமைமாடுகளும் சேரனும் ஒன்றா?

By Muthurama LingamFirst Published Aug 19, 2019, 5:09 PM IST
Highlights

சேரனுக்கு எந்த நேரத்தில் நாமினேஷனுக்கு அவரது செல்ல மகள் லாஸ்லியா ஓ.கே.சொன்னாரோ அந்த நிமிடத்திலிருந்து அவர் மீது மீண்டும் மக்கள் மத்தியில் இரக்கப்பார்வைகள் சுரக்க ஆரம்பித்துவிட்டன. சற்றுமுன்னர் ஒரு முகநூல் பதிவர்,...பிறரைக் கலாய்ப்பதைத் தவிர வேறு எந்த அறிவுமே இல்லாத எருமைமாடுகளும் சேரனும் ஒன்றா? என்ற கடுப்பான கேள்விகளுடன் ஒரு பதிவை எழுதியிருக்கிறார். அதன் விபரம் இதோ...
 
தன் உழைப்பாலும் , திறமையாலும் முன்னேறி சமூகத்தைக் கெடுக்காத படங்களை எடுத்து, ரஜினி உள்ளிட்ட தமிழகத்தின் அநாவசியங்களை தைரியமாக எதிர்த்து, சகல சமூக பிரச்சினைகளிலும் குரல் கொடுத்து,தேசிய விருதுகளும், ஏராளமான ஃபிலிம்பேர் அவார்டுகளும் பெற்று பலருக்கும் உதவி செய்து, மனிதநேயக் கலைஞனாக வலம் வந்த சேரன் தன் பொருளாதார நெருக்கடியால் மட்டுமே பிக்பாஸ் என்கிற 'உணர்ச்சி வலையில் ' மாட்டியிருக்கிறார்.

அவர் பெயரைச் சொல்வதற்குக் கூட அருகதையற்றவர்கள் கவினும், சாண்டியும். விஜய் டிவி வளர்த்தெடுத்த 'கலாய்த்தல் கலாச்சாரத்தின் 'வேகாத முட்டைகள் அவை.தேவதை என்று பலரையும் நம்ப வைத்த லாஸ்லியா அப்பட்டமான தந்திரசாலி.( அவர் உங்கள் மகளாக இருப்பதற்கல்ல. ரசிகையாக இருப்பதற்குக் கூட தகுதியில்லாத வெறும் பொம்மை).இதில் கமல் வேறு சாண்டி கும்பலுக்கு சாமரம் வீசிக் கொண்டிருக்கிறார். 'எல்லோரும் சமம் ' என்கிற பொய்யான வாதத்தை முன் வைக்கிறார். உங்கள் தகுதி தெரியாமல் கலாய்த்தால் ஒத்துக் கொள்வீர்களா ஆண்டவரே?( நானே ஒத்துக் கொள்ள மாட்டேன்)திரைத்துறையில் நீங்கள் எவரெஸ்ட் என்றால் சேரன் தொட்டபெட்டா. பிறரைக் கலாய்ப்பதைத் தவிர வேறு எந்த அறிவுமே இல்லாத எருமைமாடுகளும் சேரனும் ஒன்றா?

வசந்தபாலன் சொன்னதையே நானும் சொல்கிறேன் ' வெளியேறி விடுங்கள் சேரன் சார். மீன் சந்தையில் விண்மீன் விற்க முடியாது.-மானசீகன்*

click me!