கமலுக்குப் பதில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சண்டியர்த்தனம் செய்யக்கிளம்பும் சிம்பு...லாஸ்லியா நிலைமையை நினைச்சுப்பாருங்க பாஸ்...

Published : Aug 30, 2019, 03:23 PM ISTUpdated : Aug 30, 2019, 03:24 PM IST
கமலுக்குப் பதில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சண்டியர்த்தனம் செய்யக்கிளம்பும் சிம்பு...லாஸ்லியா நிலைமையை நினைச்சுப்பாருங்க பாஸ்...

சுருக்கம்

நடிகர் சிம்புவால் சீரழிந்தோர் சங்கம் என்று ஒன்று ஆரம்பிக்காததுதான் பாக்கி. அவரால் பாதிக்கப்பட்ட தயாரிப்பாளர்கள் அனைவரும் சமீபகாலமாக அடிக்கடி ஒன்றுகூடி ஒப்பாரி வைக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அந்த சந்திப்புகளில் சிம்புவைத் திருத்தி ஒழுக்கமான நடிகராக மாற்றுவதா அல்லது போன பணம் போகட்டுமென்று திரையுலகை விட்டு வெளியே அனுப்பி விடுவதா என்ற விவாதங்கள் சூடுபிடிக்க ஆரம்பித்திருக்கிறதாம்.  

சமீபத்தில் வெங்கட் பிரபுவின் ‘மாநாடு’படத்திலிருந்து தூக்கி அடிக்கப்பட்ட பிறகு கைவசம் ஒரு படம் கூட இல்லாவிட்டாலும் தமிழ் சினிமாவின் ஹாட் டாபிக்காகப் பேசப்படுகிறார் சிம்பு. அவரால் பாதிப்புக்கு ஆளான மைக்கேல் ராயப்பன், ஞானவேல் ராஜா, சுரேஷ் காமாட்சி மற்றும் ஒரு கன்னடத் தயாரிப்பாளர் ஆகியோர் ஒன்றுகூடி, பணம் பெற்றுக்கொண்டு நடிக்கவராத காரணத்தால் சிம்புமீது சென்னை போலீஸ் கமிஷனரிடம் மோசடி புகார் கொடுக்க முடிவு செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

ஆனால் அந்தப் புகாரால் எந்தப் பயனும் இருக்கப்போவதில்லை என்பதை உணர்ந்து,  பிறகு எடுக்கப்பட்ட முடிவில், சிம்பு ஒத்துக்கொண்ட அடிப்படையில் படங்களை முடித்துக் கொடுக்க ஏதுவாக ஏழு பேர் கொண்ட ஒரு குழுவை அமைக்க வகை செய்யப்பட்டிருக்கிறதாம்.இந்த எழுவர் குழு பொறுப்பேற்று சிம்புவை ஒவ்வொரு நாளும் தயார்ப்படுத்தி படப்பிடிப்புகளுக்கு அனுப்பிவைப்பதுடன் அவரைக் கண்காணித்து படங்களை முடித்துக் கொடுக்க வழிவகை செய்யுமாம்.அந்த அடிப்படையில் குடும்பத்துடன் வெளிநாடு சென்றிருக்கும் சிம்பு வந்ததும் முதலில் ஞானவேல்ராஜாவுக்காக நடித்துக் கொடுக்க வேண்டிய படத்தை முடித்துக் கொடுக்க முடிவாகி இருக்கிறதாம்.

நிலைமை இப்படி இருக்க இண்டஸ்ட்ரியில் சிம்புவின் பெயர் ஓவராக டேமேஜ் ஆகிவிட்டதால் கமல் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறப் போகிறார் அந்த நிகழ்ச்சியை கமலுக்குப் பதில் சிம்பு வழி நடத்தப்போகிறார் என்று கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல் ஒரு கும்பல் செய்தி ஒன்றைப் பரப்பி வருகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

சிங்கப்பெண்ணே சீரியல் ஹீரோவுக்கு கல்யாணம்... சீரியல் ஹீரோயின் உடன் விரைவில் டும்டும்டும்
சரத்குமார் உடனான காதல் முறிவுக்கு பின்... திருமணமே செய்யாமல் முரட்டு சிங்கிளாக வாழும் நடிகை..!