
விக்ரம் மகனை அடுத்தடுத்து அட்டாக் செய்யும் பிரச்னைகள்... நவ.8 தேதிக்கு ஆதித்யா வர்மா ரிலீஸ் இல்லையாம்...!
தெலுங்கில் அறிமுக இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கியிருந்த ‘அர்ஜுன் ரெட்டி’படத்தில் விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே உள்ளிட்டோர் நடித்திருந்தனர். மார்டன் தேவதாஸ் கதையை தெலுங்கு திரையுலகமே ஆச்சர்யத்துடன் திரும்பி பார்த்தது. ஆனால் தமிழில் இந்த படத்தை ரீமேக் செய்ய ஆரம்பித்ததில் இருந்தே பல்வேறு பிரச்னைகள் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. தெலுங்கில் சூப்பர் ஹிட் அடித்த இந்த படத்தை முதலில் வர்மா என்ற பெயரில் ரீமேக் செய்ய முடிவு செய்யப்பட்டது. E4 எண்டெர்டைன்மென்ட் நிறுவனம் பாலா இயக்கிய இப்படம் துளி கூட அர்ஜுன் ரெட்டியுடன் கொஞ்சம் கூட ஒத்து போகவில்லை என விமர்சனங்கள் எழுந்தன. இதனையடுத்து படத்தில் இருந்து விலகினார் இயக்குநர் பாலா. அதனையடுத்து அர்ஜூன் ரெட்டி பட இயக்குநர் சந்தீப் வாங்காவிடம் உதவியாளராக இருந்த கிரிசாயா படத்தை இயக்க ஆரம்பித்தார்.
புதுமுக ஹீரோ என்ற சாயல் கொஞ்சமும் இல்லாமல் மாஸ் எண்ட்ரீ கொடுத்து அசத்தினார் துருவ. கடந்த மாதம் வெளியான படத்தின் டிரெய்லர் அர்ஜுன் ரெட்டி படத்திற்கு சற்றும் குறைந்தது அல்ல என்பதை நிரூபித்தது. காதல், கோபம், பிரிவு, காமம் என அனைத்திலும் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்திய துருவ், புலிக்கு பிறந்தது பூனையாகாது என்பதை நிரூபித்தார். ஆனால் படத்தில் இடம் பெற்றுள்ள படுக்கையறை காட்சிகள், லிப் லாக் சீன், ஸ்மோக்கிங் மற்றும் டிரிங்கிங் காட்சிகள் காரணமாக தணிக்கை குழு ஏ சான்றிதழ் வழங்கியது. இருந்தாலும் படத்தின் மீது இருந்த அதிக நம்பிக்கையால் நவம்பர் 8ம் தேதி படத்தை வெளியிட முடிவு செய்யப்பட்டது. தனது மகனின் முதல் படம் என்பதால் ஆடியோ ரிலீஸ் ஃபங்ஷன் முதல் பட புரோமோஷன் வரை அனைத்திலும் சீயான் விக்ரம் முழு மூச்சில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த சமயத்தில் படத்தை நவம்பர் 8ம் தேதி ரிலீஸ் செய்யப்போவதில்லை என தயாரிப்பாளர் தரப்பு குண்டை தூக்கிப் போட்டுள்ளது. படத்திற்கு ஏ சர்ட்டிபிகேட் கிடைத்துள்ளதே அதற்கு காரணமாம். தமிழ்நாட்டில் ஏ சர்ட்டிபிகேட் உடன் ரிலீஸ் ஆகும் படங்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைக்காது. எனவே எப்படியாவது யு/ஏ சான்றிதழ் வாங்கிவிட வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்காக மீண்டும் படத்தை தணிக்கைக்கு அனுப்ப திட்டமிட்டுள்ள படக்குழு, அதற்கான வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. எனவே படத்தின் ரிலீஸ் தேதியை நவம்பர் 21க்கு மாற்றியுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.