சர்க்காரை அட்சித்து தூக்கிய விஸ்வாசம் !! புதிய சாதனை !!

Published : Jan 28, 2019, 08:21 PM IST
சர்க்காரை அட்சித்து தூக்கிய விஸ்வாசம் !! புதிய சாதனை !!

சுருக்கம்

நடிகர் அஜித் நடித்து அண்மையில் வெளியான விஸ்வாசம் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள என்ற பாடல் யூ டியூபில் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தப் பாடல் சர்க்கார் படத்தின் சிம்டாங்காரன் பாடலைவிட அதிக லைக்ஸ் பெற்று சாதனை படைத்துள்ளது.

பொங்கலையொட்டி கடந்த 10 ஆம் தேதி நடிகர் அஜித் நடித்த விஸ்வாசம் படம் ரீலீஸ் ஆனது. ரஜினிகாந்த் நடித்த பேட்ட திரைப்படத்துக்கும் விஸ்வாசம் படத்துக்கும் இடையே நேரடி போட்டி இருந்து வந்தது.

ஆனால் வசூலில் பேட்ட படத்தை பின்னுக்குத் தள்ளி விஸ்வாசம் பெரும் சாதனை படைத்தது. அஜித் இதுவரை நடித்த திரைப்படங்கிளிலேயேஇந்தப் படம் அதிக வசூலைப் பெற்றுத் தந்தது. இதனை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலைய்ல விஸ்வாசம் படத்தில் இடம்பெற்றுள்ள அடிச்சுத்தூக்கு பாடல் கடந்த 23-ம் தேதி யூடியூபில் வெளியானது. வெளியானது முதலே பார்வையாளர்கள், லைக்ஸ் என அதிகரித்துக்கொண்டே வருகிறது.

 இந்நிலையில் பாடல் வெளியான 5 நாட்களில் 4.8 மில்லியன் பார்வையாளர்களையும் 3 லட்சத்து 68 ஆயிரம் லைக்ஸ்களையும் பெற்றுள்ளது. இதன்மூலம் சர்க்கார் படத்தில் இடம்பெற்றுள்ள சிம்டாங்காரன் பாடல் பெற்ற லைக்ஸ்களைத் தாண்டியுள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் 12-ம் தேதி வெளியான சிம்டாங்காரன் பாடல் 33 மில்லியன் பார்வையாளர்களையும் 3 லட்சத்து 64 ஆயிரம் லைக்ஸ்களையும் தற்போது வரை பெற்றுள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நீண்ட நாள் காதலரை கரம் பிடித்த நடிகைகள்; 2025 ல் திருமணம் செய்த நடிகைகளின் பட்டியல்!
பெண்களின் உடை குறித்து சிவாஜியின் கமெண்ட்ஸ்... சின்மயி, அனசுயா பதிலடி