ஓவர் கிளாமரை உதறித் தள்ளிவிட்டு... புடவைக்கு மாறிய யாஷிகா ஆனந்த்... பொங்கல் ட்ரீட்டாக வைரலாகும் புகைப்படங்கள்...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Jan 16, 2020, 03:34 PM IST
ஓவர் கிளாமரை உதறித் தள்ளிவிட்டு... புடவைக்கு மாறிய யாஷிகா ஆனந்த்... பொங்கல் ட்ரீட்டாக வைரலாகும் புகைப்படங்கள்...!

சுருக்கம்

பொங்கலை முன்னிட்டு, பச்சை நிற ஜாக்கெட், மஞ்சள் நிற பட்டுப்புடவையில் தலை நிறைய பூ வைத்து பார்ப்பதற்கு மகாலட்சுமி போல மங்களகரமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 

"இருட்டு அறையில் முரட்டு குத்து" என்ற படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். 'துருவங்கள் பதினாறு', 'பாடம்', 'மணியார் குடும்பம்' என பல படங்களில் நடித்திருந்தாலும், எதுவும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு ஓடவில்லை. 'நோட்டா', 'கழுகு 2', 'ஜாம்பி' படங்கள் யாஷிகாவிற்கு ஓரளவுக்கு பெயர் பெற்றுத் தந்தது.

விஜய் தொலைக்காட்சி நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற யாஷிகா ஏகப்பட்ட புகழுக்கு சொந்தக்காரராக மாறினார். ரசிகர்கள் தன்னை மறந்துவிடக்கூடாது என்பதற்காக அவ்வப்போது ஹாட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். 

கவர்ச்சியில் எல்லை தாண்டிய யாஷிகா, கண்கூசும் அளவிற்கு சோசியல் மீடியாவில் ஷேர் செய்யும் புகைப்படங்கள் நெட்டிசன்களை கடுப்பில் ஆழ்த்தியுள்ளது. ஓவர் கிளாமரில் யாஷிகா போடும் போட்டோவை பார்க்கும் நெட்டிசன்கள், கமெண்ட்ஸில் தாறுமாறாக திட்டி வந்தனர். 

இதனால் திடீர் அடக்க ஒடுக்கத்திற்கு மாறிய யாஷிகா ஆனந்த் விதவிதமான புடவைகளில் குடும்ப குத்துவிளக்காக ஜொலிக்கும் படியான புகைப்படங்களை பதிவிட்டார். அந்த புகைப்படங்களும் சும்மா லைக்குகளை அள்ளியது. 

ஆனால் யாஷிகாவிற்கு தான் புடவையில் போட்டோ போட்டு போர் அடித்துவிட்டது போலும், அதனால் மறுபடியும் தனது கவர்ச்சி போட்டோ ஷூட்டிற்கே திரும்பினார். இதனால் கடுப்பான நெட்டிசன்களும் மீண்டும் யாஷிகாவை மரண பங்கம் செய்ய ஆரம்பித்தனர்.

இதனிடையே பொங்கலை முன்னிட்டு, பச்சை நிற ஜாக்கெட், மஞ்சள் நிற பட்டுப்புடவையில் தலை நிறைய பூ வைத்து பார்ப்பதற்கு மகாலட்சுமி போல மங்களகரமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். யாஷிகாவின் இந்த அடக்க, ஒடுக்கத்தை பார்த்து நெட்டிசன்கள் அனைவரும் வாய்பிளந்து நிற்கின்றனர்.


 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

வேட்டியே அவிழும் அளவுக்கு ஆட்டம் போட்டபடி இளையராஜா கம்போஸ் பண்ணிய ஜாலியான பாடல் பற்றி தெரியுமா?
துரந்தர் விமர்சனம் : ரன்வீர் சிங்கின் ஆக்‌ஷன் விருந்து டேஸ்டா? இல்லை வேஸ்டா?